வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதலாம்.. வதந்தியை செய்தியாக்கிய பிரபல ஊடகங்கள் மீது பாய்ந்தது வழக்கு
வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய் தகவல் பரப்பிய பத்திரிகையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய்யான தகவல் பரப்பிய இந்தி பத்திரிக்கை ஆசிரியர் தெய்னிக் பாஸ்கர், பத்திரிக்கை உரிமையாளர் தன்வீர் மற்றும் பிரசாந்த் உமராவ் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல் வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தாக்கப்பட்டதாக சில வீடியோக்கள் அண்மையில் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
சமூக வலைதளங்களில் பரவும் இந்த தகவல்கள், வீடியோக்கள் முற்றிலும் பொய்யானவை என்றும், தமிழ்நாட்டில் இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து வந்து பணியாற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றும் தமிழ்நாடு காவல்துறை விளக்கம் அளித்தது.

வடமாநில தொழிலாளர்கள் வீடியோ
அதேபோல் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவும் வீடியோ போலியானது என்றும், வதந்தி பரப்பிய 4 பேர் மீது இதுவரை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் வடமாநில தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.

சைலேந்திர பாபு அறிக்கை
அதேபோல் புலம்பெயர்ந்த வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக உண்மைக்கு புறம்பான பொய்யான தகவல் இணையதளத்திலும், சமூக ஊடகங்களிலும் விஷமிகள் சிலரால் பரப்பப்பட்டுள்ளது. அப்படி பொய் செய்தி பரப்பியவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு வருகிறார்கள் என்று சைலேந்திர பாபு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பத்திரிகையாளர்கள் மீது வழக்கு
அதேபோல் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய்யான தகவல் பரப்பிய இந்தி பத்திரிக்கை ஆசிரியர் தெய்னிக் பாஸ்கர், பத்திரிக்கை உரிமையாளர் தன்வீர் மற்றும் பிரசாந்த் உமராவ் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விரைவில், இவர்கள் கைது செய்யப்படுவர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 ஆண்டுகள் சிறை
அதுமட்டுமல்லாமல் வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய நபர்களை பிடிக்க டிஜிபி உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. வதந்தி பரப்புவோருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என டிஜிபி சைலேந்திர பாபு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications