மதுரை ஆதீனம் கார் டிரைவர் மீது வழக்கு பதிவு.. உளுந்தூர் பேட்டை விபத்து சம்பவத்தில் போலீசார் அதிரடி
மதுரை: மதுரை ஆதீனம் கார் டிரைவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விபத்துக்குள்ளான மற்றொரு கார் டிரைவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர். மதுரை ஆதீனம் கார் டிரைவரின் கவனக்குறைவே விபத்துக்கு முழு காரணம் எனவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் 6ஆவது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு கடந்த 3 ஆம் தேதி தொடங்கியது. இன்றுடன் இந்த மாநாடு முடிகிறது. இந்த மாநாட்டில் மதுரை ஆதீனம் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பங்கேற்க தனது பார்சூனர் காரில் ஆதீனம் மதுரையில் இருந்து சென்னைக்கு காரில் வந்து கொண்டு இருந்தார்.

மதுரை ஆதீனம்
ஆதீனத்தின் கார் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அஜீஸ் நகர் ரவுண்டானா பகுதியில் வந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது. இந்த விபத்து தொடர்பாக உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே, மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம், தன்னை கொல்ல சதி திட்டம் நடப்பதாகவும், என் வாகனத்தின் மீது கார் இடித்ததற்கான காரணம் குறித்தும் காவல் துறை விசாரிக்க வேண்டும் என பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்திருந்தார்.
ஆதீனத்தின் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், மதுரை ஆதீனத்தின் குற்றச்சாட்டிற்கு போலீசார் மறுப்பு தெரிவித்தனர். இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் கூறுகையில், "மதுரை ஆதீனம் மடாதிபதி சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது உளுந்தூர்பேட்டை சேலம் ரவுண்டானா அருகே மற்றொரு காரின் மீது இடித்துக்கொண்ட சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
காரின் பக்கவாட்டில் உரசியது
ஆனால் அதற்குள் இரு தரப்பினரும் அங்கிருந்து சென்று விட்டனர். இதையடுத்து சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆராய்ந்தோம். அதில் மதுரை ஆதீனத்தின் கார், அஜீஸ் நகர் மேம்பாலத்தில் செல்வதற்கு பதிலாக அஜீஸ் நகர் பிரிவு சாலை வழியாக சேலம் ரவுண்டானா அருகே உளுந்தூர்பேட்டை மார்க்கத்தில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது.
அப்போது சேலத்தில் இருந்து சென்னை மார்க்கமாக மெதுவாக வந்த கார் மீது பக்கவாட்டில் உரசியது. இந்த விபத்தில் சேலத்தில் இருந்து வந்த காரின் முன்பகுதியிலும், ஆதீனம் வந்த காரின் இடது பின்பக்கத்திலும் லேசான சேதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இரு தரப்பினர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர், அவர்களாகவே அந்த இடத்தில் இருந்து சென்றுவிட்டனர்.
சிசிடிவி கேமரா காட்சி ஆய்வு
இச்சம்பவம் தொடர்பாக மதுரை ஆதீனத்தை கொல்ல சதி திட்டம் நடந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மதுரை ஆதீனமும் தன்னை கொல்ல சதி திட்டம் நடப்பதாக தெரிவித்து வருகிறார். முதற்கட்ட விசாரணையில் அவரை கொல்ல சதி திட்டம் எதுவும் நடந்ததாக தெரியவில்லை. மேற்படி விபத்தானது முழுக்க முழுக்க மதுரை ஆதீனம் பயணம் செய்த கார் டிரைவரின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து என தெரிகிறது.
கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்ததில் மதுரை ஆதீனம் பயணம் செய்த வாகனம் அதிவேகமாக சென்று இவ்விபத்தினை ஏற்படுத்தியதாக தெரிய வருகிறது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக மதுரை ஆதீனமோ அவர்களை சார்ந்தவர்களோ கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எவ்வித புகாரும் இதுவரை கொடுக்கவில்லை. பொய்யான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியது.
கார் டிரைவர் மீது வழக்கு
இதற்கிடையே, இந்த விபத்து தொடர்பாக பரபரப்பு சிசிடிவி காட்சிகளும் வெளியானது. மதுரை ஆதீனத்தின் கார் மின்னல் வேகத்தில் சென்றது தெரியவந்தது. தவறான பாதையில் மின்னல் வேகத்தில் மதுரை ஆதீனம் கார் சென்றதால் இந்த விபத்து நடைபெற்று இருப்பதாக போலீசார் கூறியிருந்தனர்.
இந்த நிலையில், மதுரை ஆதீனம் கார் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விபத்திற்குள்ளான மற்றொரு காரின் ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில் உளுந்தூர் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications