ஷூ கடையில் யார் பாருங்க.. செருப்பையே உற்று உற்று பார்த்த 2 பெண்கள்.. கடைசியில் ஆடிப்போன சென்னை ஆவடி
சென்னை: நேற்று ஒரேநாளில் சென்னையில் பல்வேறு இடங்களில் நடந்த திருட்டு சம்பவங்களில், பெண்கள் கைதாகி இருப்பது பெருத்த கவலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. வேறு வேறு இடங்களில் நடந்த திருட்டு சம்பவங்கள் குறித்து சென்னை போலீசார் தீவிரமான விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
எந்நேரமும் கூட்ட நெரிசல் காணப்படும் பகுதியாக தி.நகர் பகுதி விளங்கி வருகிறது. இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தியே கடைகளிலும், கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களிடமும், சில பெண்கள் கைவரிசையை காட்டிவிடுகிறார்கள்.

மணிபர்ஸ்: நேற்றைய தினம், திநகர் பகுதியில், துணிமணி வாங்கிகொண்டு சென்ற 2 பெண்களிடமிருந்து, மணிபர்ஸ் மாயமாகி உள்ளது.. துணிகளை வாங்கிக்கொண்டு, ஆட்டோ பிடிப்பதற்காக நடந்து சென்றபோது, யாரோ ஒரு பெண் நெருங்கி வந்து பேச்சு தந்ததாகவும், அந்த பெண் அங்கிருந்து நகர்ந்த சிறிது நேரத்துக்கு பிறகு பார்த்தால், தங்கள் கையில் வைத்திருந்த பர்ஸை காணோம் என்று 2 பெண்களும் பதறினார்கள்.. இதுகுறித்து போலீசிலும் புகார் அளிக்கப்போவதாக கூறி சென்றனர்.
அதேபோல, புழலில் ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது.. பஜனை கோவில் தெருவை சேர்ந்த அமுதா என்பவர், வீட்டிற்கு கீழேயே மளிகைக் கடை நடத்தி வருகிறார்.
நகை திருட்டு: இவர், கடந்த 19ம் தேதி மாலை, தன்னுடைய குழந்தையை அழைத்து வர பள்ளிக்கு சென்றார்.. பிறகு வீடு திரும்பிய போது, பீரோவில் இருந்த நகை திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து புழல் போலீசிலும் புகார் தந்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வீசாரணை மேற்கொண்டபோதுதான், ரேகா என்பவர் இந்த திருட்டை செய்திருப்பது உறுதியானது.
கும்மிடிப்பூண்டியை சேர்ந்த 31 வயதான ரேகா, அமுதா வீட்டிலேயே குடியிருக்கிறாராம்.. அமுதா வெளியில் செல்வதை கண்காணித்து கொண்டேயிருந்து அவ்வப்போது, சிறிது சிறிதாக, 25 சவரன் நகைகளை ரேகா திருடியதும் அம்பலமானது.
தங்க நகைகள்: அதுமட்டுமல்ல இந்த வழக்கை விசாரித்தபோதுதான், ரேகா மீது பாதிரிவேடு போலீசில், கொலை வழக்கு இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, நேற்று ரேகாவை கைது செய்த புழல் போலீசார், அவரிடமிருந்து 6 சவரன் நகையை பறிமுதல் செய்து, ஜெயிலிலும் அடைத்துள்ளனர்.
அதேபோல கொடுங்கையூரில் ஒரு கொடுமை நடந்துள்ளது.. தண்டையார்பேட்டையை சேர்ந்த 80 வயது அப்துல் ரகுமான், கொடுங்கையூர் மீனாம்பாள் சாலை நடைபாதையில் கடந்த 10 வருடங்களாக செருப்பு கடை வைத்துள்ளார். இரவு 9 மணிக்கு 2 பெண்கள் கடைக்கு செருப்பு வாங்குவதற்காக வந்துள்ளனர்.. இருவரும் மாறி மாறி செருப்புகளை போட்டு பார்த்துக் கொண்டும், விலையை கேட்டுக் கொண்டுமிருந்தனர்.
செருப்பு கடை: 2 பேருமே செருப்புகளையே பார்த்து கொண்டிருந்த நேரத்தில், இன்னொரு நபர் செருப்பு வாங்குவதற்காக அங்கே வந்தார்.. உடனே அவருக்கு செருப்புகளை எடுத்துக்காட்டி வியாபாரம் செய்து கொண்டிருந்தார் அப்துல் ரகுமான்.
அப்போது அந்த 2 பெண்களும், எங்களுக்கு எந்த மாடலுமே பிடிக்கவில்லை, செருப்பு வேண்டாம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார்கள்.. அவர்கள் சென்றபிறகுதான், ஓரமாக வைத்திருந்த கல்லாப்பெட்டி மாயமாகியிருந்ததை கண்டு அப்துல் ரகுமான் அதிர்ச்சி அடைந்தார்.. அந்த கல்லாப்பெட்டியில் 6,500 ரூபாய் வைத்திருந்தாராம்..
சிசிடிவி கேமரா: 2 பெண்களும், அந்த கல்லாப்பெட்டிக்கு பக்கத்தில் உட்கார்ந்துதான், செருப்புகளை மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார்களாம்.. எனவே, அவர்கள்தான் கல்லாப்பெட்டியை திருடி சென்றிருக்க வேண்டும் என்று உறுதி செய்துகொண்ட அப்துல் ரகுமான் கொடுங்கையூர் போலீசில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். இதையடுத்து, போலீசாரும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, அந்த பெண்கள் யார் என்பது குறித்து விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.
-
ராட்சத பலூன்கள்.. ஃபிளாஷ் மாப்கள்.. தேர்தலுக்கு சென்னை எப்படி ரெடியாகிறது தெரியுமா? -
சிக்னலில் நின்ற விஜய் வாகனம்.. யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென தவெக தொண்டர் செய்த செயல்! -
பொதுமக்கள் கவனத்திற்கு.. சென்னை புறநகர் ரயில்கள் சேவை ரத்து.. ரயில்வே முக்கிய அறிவிப்பு -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன்












Click it and Unblock the Notifications