கருமம் பிடிச்ச சாதி.. அவ செத்துட்டா.. முகத்தை கூட பார்க்க முடியலை.. கதறிய இளைஞரின் கண்ணீர் முடிவு!
சென்னையில் சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்
சென்னை: "நானும் பவித்ராவும் ரொம்ப லவ் பண்ணோம்.. கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.. அவ இப்போ செத்துட்டா.. அவ ஃபேஸ்கூட பாக்க விடல.. அவ இல்லாம என்னால இருக்க முடியல.. அதனால நானும் அவகூட போறேன்" என்று சாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர் பேஸ்புக்கில் பதிவு போட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னை அடுத்த பட்டாபிராம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த். ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.. இவர் பவித்ரா என்ற பெண்ணை காதலித்தார்.. ஆனால் இருவரும் வேறு வேறு சாதி.

குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி இவர்கள் 5 வருடத்துக்கு முன்பு கல்யாணம் செய்து கொண்டனர்.. ஆனால் பவித்ராவின் பெற்றோர் அவரை நிம்மதியாக வாழ விடவில்லை என்று கூறப்படுகிறது.. இதனிடையே 2019ம் ஆண்டு தம்பதிக்குள் ஏதோ பிரச்சனை வந்துவிட்டது.. அதனால் கோபித்து கொண்டு அம்மா வீட்டுக்கு பவித்ரா போனார்.
இதுதான் சாக்கு என்று மகளை அவரது வீட்டில் அனுப்பவே இல்லை.. தங்களுடனே வைத்து கொண்டார்கள்.. மதுமட்டுமல்ல, பவித்ராவுக்கு வேறு ஒரு கல்யாணம் செய்யவும் முடிவெடுத்துவிட்டனர்.. இதனால் அதிர்ச்சி அடைந்த பவித்ரா, அந்த கல்யாணத்துக்கு எதிர்ப்பு காட்டிஉள்ளார்.. அவரையும் மீறி கல்யாண வேலை நடந்தது.. மற்றொரு புறம் விவகாரத்தும் கேட்கப்பட்டதாக தெரிகிறது.
இதனால் கணவனுடன் வாழ முடியவில்லையே என்ற வேதனையில், கடந்த 15ம் தேதி பவித்ரா வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். விஷயத்தை கேள்விப்பட்டு அரவிந்த் துடித்து விட்டார்.. பவித்ராவின் முகத்தை பார்க்க கதறி கொண்டு ஓடினார்.. ஆனால், குடும்பத்தினர் பார்க்கவிடாமல் அலைக்கழித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் கடந்த 4 நாட்களாக மனஉளைச்சல் அடைந்த அரவிந்த், தற்கொலை செய்ய முடிவெடுத்தார்.. முன்னதாக தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவு போட்டார்.. அதில், " நானும் ரொம்ப லவ் பண்ணி லவ் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.. 15.7.2020 அன்னைக்கு செத்துட்டா.. நான் அவ ஃபேஸ்கூட பாக்க விடல.. அவ இல்லாம இருக்க முடியல.. அதனால நானும் அவகூட போறேன். எங்க சாவுக்கு காரணம் பவியின் அம்மா, மாமா பலராமன்" என்று தெரிவித்துள்ளார்.. மேலும் தங்களது காதல் வாழ்க்கையை நினைவு கூர்ந்தும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.
இந்த விவகாரம்தான் வெடித்து கிளம்பி உள்ளது.. இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் பெற்றோர் தற்கொலைக்கு தூண்டினார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.. காதல் ஜோடி 2 பேருமே தூக்கு போட்டு கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை தந்து வருகிறது.
-
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
Kerala: ஒன்றரை வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள்! 7 எலும்பு முறிவுகள்! துடிதுடித்த திருவனந்தபுரம்! -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு?












Click it and Unblock the Notifications