காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் சாதி பெயர் இருந்தது தட்டச்சு பிழை - சிங்காநல்லூர் ஸ்ரீநிதி விளக்கம்!
கோவை: சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில், கோவை சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் பெயர், சாதி பின்னொட்டுடன் இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீநிதி அது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இவற்றில் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். கோவையில் காங்கிரஸ் கட்சிக்கு சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிங்காநல்லூர் தொகுதிக்கு தேசிய இளைஞரணி செயலாளர் ஸ்ரீநிதி, கவுண்டம்பாளையம் தொகுதிக்கு மாநில இளைஞரணி செயலாளர் சூர்யபிரகாஷ் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வேட்பாளர் பட்டியலிலேயே ஶ்ரீநிதி நாயுடு என்று சாதி பெயருடன் அவர் பெயர் அறிவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் ஶ்ரீநிதி பெயர் மட்டும் தான் சாதிய அடையாளத்துடன் வெளியானது. இது சமூக வலைதளங்களிலும் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது.
இந்த வேட்பாளர் அறிவிப்பால் கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தியடைந்தனர். அந்த இரண்டு வேட்பாளர்களையும் மாற்ற வலியுறுத்தி, கோவை காங்கிரஸ் அலுவலகத்தில் அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள் நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஸ்ரீநிதி, 2021 சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் உடுமலைப்பேட்டை தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தவர். அதன் பிறகு பாஜக அதிமுக கட்சிகளுக்கு சென்றுவிட்டு 2023 ஆம் ஆண்டில்தான் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அண்ணாமலை ஆதரவாகச் செயல்பட்டவர். அவருக்கு சீட் கொடுத்துள்ளனர் என காங்கிரஸ் கட்சியினர் குமுறினர்.
இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் தனது பெயருடன் சாதி பின்னொட்டு இடம்பெற்றது குறித்து விளக்கம் அளித்துள்ளார் ஸ்ரீநிதி. தனது பெயருடன் சாதிய பின்னொட்டு இணைக்கப்பட்டிருந்தது தனக்கே அதிர்ச்சியளித்ததாகவும், அது தட்டச்சு பிழை என்றும் ஸ்ரீநிதி தெரிவித்துள்ளார்.
சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீநிதி வெளியிட்டுள்ள பதிவில், "நான் ஸ்ரீநிதி வெங்கடேச மோகன். தமிழ்நாட்டில் பிறந்து, வளர்ந்து, மண்ணின் விழுமியங்களை உள்வாங்கியவள். தற்போது சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் பட்டியலில் எனது பெயருடன் சாதிய அடைமொழி இணைக்கப்பட்டதை பார்த்ததும் எனக்கே பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அது தட்டச்சு பிழையால் (Clerical Error) ஏற்பட்டுவிட்டது.
என்னை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்திய தந்தை பெயரையும், எனக்கு வலிமை சேர்த்த கல்வி தகுதியையும் மட்டுமே என்னுடைய அடையாளமாக கொண்டவள் நான். சாதி-மத பேதமற்ற சமத்துவமே எனது கொள்கை. எனவே தட்டச்சு பிழையை கொண்டு அவதூறு பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். சாதி மதங்களை கடந்து மக்களின் நலனுக்காக என்றும் பணி செய்வதே எனது கடமை!" எனத் தெரிவித்துள்ளார்.
-
தவெகவை ஏன் எதிர்க்கிறீர்கள்? வாரிய பதவி கேட்டு வாங்குங்க! ஸ்ரீநிதிக்கு காங்கிரஸ் நிர்வாகி அட்வைஸ் -
விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி! -
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
கோவை சிறுமி விவகாரம்! வாழறதுக்கே தகுதி இல்லாதவர்கள்! எம்.எஸ்.பாஸ்கர் கொந்தளிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications