சாதி வெறி கொண்டவன் அரசியலுக்கு தகுதியற்றவன் என்று போதித்தவர் முத்துராமலிங்க தேவர்.. சீமான் மரியாதை!
சென்னை : முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியையொட்டி, சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சாதிய எண்ணம் கொண்டவன் அரசியலுக்கு வந்தால் நாடு நாசமாகிவிடும் என்ற ஆகப்பெரும் கோட்பாட்டைப் போதித்த சிந்தனையாளர் தேவர் எனத் தெரிவித்துள்ளார் சீமான்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115-வது ஜெயந்தி விழா மற்றும் 60-வது குருபூஜை விழாவையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள தேவர் நினைவிடத்திற்குச் சென்று மூத்த அமைச்சர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் மரியாதை செய்து வருகின்றனர்.

தமிழருக்குள்ளே இருக்கிற பதவி வெறி
இந்நிலையில், சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, சீமான், பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தேவர் ஜெயந்தியையொட்டி தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்கு முன்னதாக, இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்கள் எங்களை வீழ்த்தியது, தமிழருக்குள்ளே இருக்கிற வஞ்சகம், சூழ்ச்சி, துரோகம், பதவிவெறி, பணத்தாசைதானே ஒழிய, வீரமோ ஆயுதமோ இல்லை என்று அன்றே உணர்ந்து, உணர்த்திய பெருந்தமிழர் தெய்வத்திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் எனத் தெரிவித்துள்ளார்.

பாட்டாளிகளின் பங்காளி
மேலும் அந்த அறிக்கையில் சீமான், " 'எனக்கு பாய்தான் தெரியும், பஞ்சு மெத்தை தெரியாது; பதுங்கத் தெரியும், பயம் கொள்ளத் தெரியாது; விவசாயம் தெரியும், வியாபாரம் தெரியாது' என்று வாழ்ந்த எளிய மகன். 'தேசமே எனது உடல், தெய்வீகமே எனது உயிரென வாழ்ந்த விடுதலைப் போராட்ட வீரர். 100 ஏழைகள் கூடி ஒரு பணக்காரரை உருவாக்குகிறார்கள், ஒரு பணக்காரன், ஆயிரம் ஏழைகளை உருவாக்குகிறான்' என்று போதித்த பாட்டாளி வர்க்கத்தினுடைய பங்காளி.

காலஞானி தேவர்
கைரேகை சட்டம் என்கிற கொடுஞ்சட்டத்தைத் திணித்த போது அதை எதிர்த்துப் போராடி, தகர்த்த புரட்சியாளர் முத்துராமலிங்கத் தேவர். 'பாலை போத்தலில் அடைத்து இன்று விற்பதைப் போல நாளை தண்ணீரையும் அடைத்து விற்பார்கள்; விளைநிலங்களை எல்லாம் வீட்டுமனைகளாக்கி விற்பனை செய்வார்கள்; புறாக்கள் கூடுகட்டி வாழ்வது போல ஒரு நாள் மக்கள் வீடு கட்டி வாழ்வார்கள்' என்று இன்று நடக்கின்ற இப்பேரவலங்களை எல்லாம் அன்றே கணித்த காலஞானி. 'உண்மையைச் சொல், நீ உரக்கச் சொல், உறுதியாகச் சொல், இறுதிவரை சொல், நீ தான் சிறந்த தமிழ் மகன்' என்று கற்பித்த பெருந்தகை.

எவன் வீரன்?
'மலர் மாலைக்கு ஒருவன் கழுத்தை நீட்டுவதைப்போல, மரணக் கயிற்றுக்கு எவன் கழுத்தை நீட்டுகிறானோ, அவன்தான் வீரன்!' என்று எங்களைப் போன்ற தமிழிளம் தலைமுறையினருக்கு உணர்வூட்டிய வீரத்தமிழ்மகன். 'உழைக்கின்ற கை தாழ்ந்தது, உண்கிற கைதான் உயர்ந்தது என்கின்ற எண்ணம் எவருக்கும் இருக்கக்கூடாது. தெய்வத்திற்கு முன்பு இரு கைகளையும் இணைத்துதான் நாம் வழிபடுகிறோம், எனவே பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கின்ற இந்த சாதிய பாகுபாடு கூடவே கூடாது' என்று போதித்த சமத்துவ நாயகர்.

சாதிய எண்ணம் கொண்டவன்
சாதிய எண்ணம் கொண்டவன் அரசியலுக்கு வந்தால் நாடு நாசமாகிவிடும், சாதிய எண்ணம் கொண்டவன் இறைவனையே வழிபடத் தகுதியற்றவன். பதவி என்பது மக்களுக்குச் செய்கின்ற சேவைதான் என்கின்ற எண்ணம் கொண்டவனிடத்தில் அதிகாரம் இருக்க வேண்டும், இல்லையென்றால் மக்களின் நலன் என்பது கனவாகிவிடும் என்பது போன்ற ஆகப்பெரும் தத்துவங்களை, கோட்பாடுகளைப் போதித்த ஆகப்பெரும் சிந்தனையாளர்.

புகழ் வணக்கம் - சீமான்
நம்முடைய ஐயா முத்துராமலிங்கத் தேவர் அவர்களினுடைய நினைவைப் போற்றுகின்ற இந்நாளில், அவர் காட்டிய வழியைப்பற்றி நடக்கும் தமிழிளம் தலைமுறையினராகிய நாம், அடிமை தமிழ்ச்சமூகத்தின் உரிமை மீட்சிக்கும், அதன் எதிர்காலப் பாதுகாப்பான நல்வாழ்விற்கும் இறுதிவரை உறுதியாகப் போராடுவோம் என்கிற உறுதியை ஏற்போம். மதிப்புமிக்க நமது ஐயா தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களுக்குப் பெருமிதத்தோடு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!" எனத் தெரிவித்துள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications