உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடகா மதிக்காத போக்கு சரி இல்லை- அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை!
சென்னை: காவிரி நதிநீர் திறப்பு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடகா மதிக்காத போக்கு சரி இல்லை என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரை திறந்துவிட வேண்டும் என காவிரி ஒழுங்காற்று பரிந்துரை வழங்கும்; இதனடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையமும் உத்தரவிடும். ஆனால் இந்த உத்தரவை கர்நாடாக அரசு மதிக்காமல் சொற்ப அளவு நீரைத்தான் திறந்துவிட்டு வருகிறது.

காவிரி மேலாண்மை ஆணையம்: தற்போதும் காவிரியில் வினாடிக்கு 2,600 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து நவம்பர் 3-ந் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கூட உள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 2,600 கன அடி நீரை திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட இருக்கிறது.
டிகேஎஸ் அடம்: ஆனால் இப்போதே, காவிரியில் ஒரு சொட்டு நீரைக் கூட திறக்கமாட்டோம் என கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் கூறிவருகிறார். கர்நாடகா அணைகளின் நீர் இருப்பு என்பது குடிநீருக்கானதுதான்; தமிழ்நாட்டு பாசனத்துக்கு நீரை திறக்கவே முடியாது என்கிறார்.
துரைமுருகன் கண்டனம்: கர்நாடகாவின் இந்த ஆணவப் போக்குக்கு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், கர்நாடகா தமிழ்நாட்டுக்கு வெறும் 53 டிஎம்சி நீரைத்தான் தந்துள்ளது. இன்னமும் 86 டிஎம்சி நீர் தர வேண்டும். கர்நாடகாவின் இந்த போக்கு ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானது அல்ல இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார்.
மண்டியா போராட்டம்: ஏற்கனவே தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்கக் கூடாது என வலியுறுத்தி கர்நாடகாவின் மண்டியா மாவட்டத்தில் 2 மாதங்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகிறது. இருந்த போதும் சொற்ப நீரையாவது கர்நாடகா திறந்துவிட்டது. தற்போது துணை முதல்வர் டிகே சிவகுமாரின் பிடிவாதம் காரணமாக, தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பாலைவனமாகும் அச்சத்தை வெளிப்படுத்துகின்றனர் தமிழ்நாட்டு விவசாயிகள். தமிழ்நாடு அரசும் உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியும் கர்நாடகா தொடர்ந்து பிடிவாதம் காட்டுவதாலேயே அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications