காவிரி: கர்நாடகாவை காலி செய்ய சீமான் அதிரடி ஐடியா- 'மின்சார ஒழுங்காற்று குழு- மேலாண்மை ஆணையம்'!
சென்னை: காவிரி நதிநீர் பிரச்சனையில் கர்நாடகாவுக்கு பதிலடி தர 'மின்சார ஒழுங்காற்று குழு- மின்சார மேலாண்மை ஆணையம் அமைப்போம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள் கர்நாடகா அரசுக்கு சொந்தமானவை. காவிரி நீர் தமிழ்நாடு, கர்நாடகா, புதுவை மாநிலங்கள் பகிர்ந்து கொள்கின்றன. காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனையால் பெரும் போராட்டத்துக்குப் பின் காவிரி நடுவர் மனறம் அமைக்கப்பட்டது. அதன் இறுதித் தீர்ப்பு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது.

காவிரி அணைகளின் நீர் இருப்பு, மழைப் பொழிவு உள்ளிட்டவற்றை ஆராய்ந்து காவிரி ஒழுங்காற்று குழு நீர் பங்கீட்டு அளவு குறித்து பரிந்துரைகள் வழங்கும். இந்த பரிந்துரையை ஏற்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுகளை பிறப்பிக்கும். இதில் பிரச்சனை ஏற்படும் போது மீண்டும் உச்சநீதிமன்றத்தின் கதவுகள் தட்டப்படும். இதுதான் நடைமுறையில் இருந்து வருகிறது. இதனைத்தான் தமிழ்நாடு அரசும் பின்பற்றுகிறது. தற்போதைய நிலையில் மத்திய அரசின் தலையீடு இல்லாத வகையில் இந்த நடைமுறை உள்ளது.
இந்நிலையில் காவிரி நதிநீர் பிரச்சனைக்கு பதில் தரும் வகையில் நாம் தமிழர் ஆட்சி அமைந்தால் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஆவேசமாக கூறியுள்ளார் சீமான். அதாவது மத்திய அரசுக்கு சொந்தமானது நெய்வேலி அனல் மின் நிலையம். இருந்த போதும் நாம் தமிழர் ஆட்சியில் தமிழ்நாடு அரசே ஒரு ஒழுங்காற்று குழு அமைக்கும்; ஒரு மேலாண்மை ஆணையம் அமைக்கும். அது தமிழ்நாட்டுக்கு போதுமான மின்சாரம் இல்லை என சொல்லும். அப்போது கர்நாடகா என்ன செய்யும் என சொல்லி இருக்கிறார் சீமான். கடந்த காலங்களில் காவிரி பிரச்சனையின் போது நெய்வேலி மின்சாரத்தை நிறுத்துவோம் என பல்வேறு அமைப்புகள், நடிகர்கள் போராட்டம் நடத்தி இருக்கின்றனர்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படியான காவிரி ஒழுங்காற்று குழு; காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகளையே கர்நாடகா அரசு ஏற்கவில்லை; மீண்டும் உச்சநீதிமன்றம் போவோம்- காவிரி மேலாண்மை ஆணையத்திடம் சீராய்வு மனு தாக்கல் செய்வோம் என்கிறது கர்நாடகா என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications