காவிரி: இப்படியா 'கறாரா'? கர்நாடகா காங். முதல்வர் சித்தராமையா மீது அமைச்சர் துரைமுருகன் பாய்ச்சல்!
சென்னை: காவிரி நதிநீர் பிரச்சனையில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா கடுமையாக பேசுவதற்கு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வேலூரில் நேற்று செய்தியாளர்களிடம் தமிழ்நாடு அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது: நாம் தண்ணீர் கேட்பது யாசகம் அல்ல. உச்சநீதிமன்றத்தால் அறுதியிட்டு சொல்லப்பட்ட உரிமை. கர்நாடகாவில் தண்ணீர் இல்லை என்கிறார்கள். மழை பெய்து ஏராளமான தண்ணீர் இருந்தால்தான் தமிழ்நாட்டு தண்ணீர் தர முடியும். குறைந்த தண்ணீர் இருந்தால் கொடுக்க முடியாது என சொல்ல முடியாது.

பங்கீடுதான் முக்கியம்: கையளவு தண்ணீர் இருந்தாலும் தமிழ்நாட்டுக்கு பங்கிட்டு தர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கர்நாடகாவோ ஆங்காங்கே அணைகளில் தண்ணீரை நிறுத்தி வைத்துக் கொண்டு கிருஷ்ணராஜசாகர், கபினி அணைக் கட்டுகளில் நிறுத்தி வைக்கின்றனர்.
திறக்க முடியாது எனும் கர்நாடகா: ஆகையால் இருக்கின்ற தண்ணீரில் எங்களுக்கு உரிய நீரை தர வேண்டும் என நாங்கள் கேட்டோம். நாங்கள் கேட்டது உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட காவிரி ஒழுங்காற்று வாரியம், காவிரி மேலாண்மை ஆணையம் ஆகியவற்றிடம்தான் கேட்டோம். அவர்கள் கண்ணை மூடிக் கொண்டு 15 நாளைக்கு 5,000 டிஎம்சி நீர் திறந்துவிடுங்க என சொல்லமாட்டார்கள். ஏனெனில் இரு மாநிலங்களுக்கும் பொதுவானவை காவிரி ஒழுங்காற்று வாரியம், காவிரி மேலாண்மை ஆணையம். கர்நாடகா அணைகளில் இருக்கிற நீரை கணக்கிட்டு 15 நாளைக்கு வினாடிக்கு 5,000 கன அடி நீரை தரலாம் என முடிவு செய்து அறிவிக்கிறார்கள். ஆனால் அதையும் திறந்துவிட முடியாது என்கிறது கர்நாடகா.
அனைத்து கட்சிக் கூட்டம்: ஆகையால் உச்சநீதிமன்றத்தால் நியமிக்க வாரியம், ஆணையத்தின் உத்தரவை மீறுவது சரியானது அல்ல. அதற்காக அவர்கள், சர்வ கட்சிக் கூட்டத்தை கூட்டுகின்றனர். அதனால் ஒன்றும் பெரிதாக பிரச்சனை இல்லை. ஏன் நம்மால் சர்வ கட்சிக் கூட்டத்தைக் கூட்ட முடியாதா? நாமும் கூட்டலாம். அது பெரிய தவறு அல்ல.
உச்சநீதிமன்றத்தில் விசாரணை: ஆனால் வரும் 21-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது என்ன நடந்தது என்பதை மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி விவரிக்க இருக்கிறார். அதை கேட்டு உச்சநீதிமன்றம் என்ன ஆணையிடுகிறதோ அதற்கு கட்டுப்பட வேண்டும். அதற்குப் பிறகு நமக்கு எதுவும் சாதகமாக இல்லை என்றால் அடுத்து என்ன செய்வது என அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டி யோசிக்கலாம். இப்போது, நாம் எதிர்பார்ப்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத்தான்.
சித்தராமையா புரியாமல் பேச்சு: தமிழ்நாட்டுக்கு எதிராக போராட்டம் நடத்துவது என்பது எப்போது பார்த்தாலும் கர்நாடகாவில் நடக்கும் திருவிளையாடல்கள். நான் அதைப்பற்றி எல்லாம் சொல்வதற்கில்லை. ஆனால் ஒன்று. கர்நாடகத்தின் முதல்வர் சித்தராமையா மூத்தவர். அரசியலில் முதிர்ந்தவர். கருணாநிதிக்கு வேண்டியவர். ஏன் எனக்கே மிக நெருக்கமான நண்பர். அவர் கூட நிலைமையை புரிந்து கொள்ளாமல் பேசியிருப்பதுதான் ஆச்சரியமளிக்கிறது.

டிகே சிவகுமார் உணர்ச்சிவசப்படுபவர்: நீர்வளத்துறை அமைச்சர் டிகே சிவகுமார் தொகுதியில்தான் மேகதாது அணை கட்டும் இடம் வருகிறது. அவர் கொஞ்சம் உணர்ச்சி வசப்படலாம். அவர் அப்படிப்பட்டவர்தான். ஆனால் சித்தராமையா மீது அளவு கடந்த மரியாதை உண்டு. அவர் நிலைமைகளைத் தெரியாமல் தண்ணீர் திறக்க முடியாது என என்கிறார்.
சித்தராமையாவால் வருத்தம்: காவிரி வரலாற்றில் ஒரு 10 முதலமைச்சர்களைப் பார்த்திருக்கிறேன். காவிரி பிரச்சனையின் தொடக்கத்தில் இருந்து இந்த இலாகாவை கையில் வைத்திருப்பவன் நான். இதன் ஒவ்வொரு அணுவும் எனக்கு தெரியும். ஆகையால் சித்தராமையாவிடம் மரியாதையுடன் கேட்கிறேன்.. ஐயா, நீங்கள் தண்ணீர் தருவது ஒரு பக்கம் இருக்கட்டும். நீங்கள் இப்படி வெட்டு ஒன்று துண்டு இரண்டு என பேசுவது என் மனதுக்கு வருத்த்தைத் தருகிறது. இவ்வாறு தமிழ்நாடு அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications