விசாரணை கைதி விக்னேஷ் மரணம்! 2 காவலர்களை கைது செய்த சிபிசிஐடி! 10 மணி நேர விசாரணைக்கு பின் அதிரடி
சென்னை: சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் விக்னேஷ். கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி இருவரும் வந்த ஆட்டோவை கெல்லீஸ் அருகே போலீசார் தடுத்து நிறுத்தி வாகன சோதனை செய்துள்ளனர்,
அவர்கள் இருவரையும் விசாரித்த போது, இருவரும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களைக் கூறியுள்ளனர். இதையடுத்து அவர்களை போலீசார் சோதனை செய்துள்ளனர்,

உயிரிழப்பு
அப்போது தான் அவர்களிடம் கஞ்சா, மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்த விக்னேஷுக்கு விசாரணையின்போது, கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாகவும், இதையடுத்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

விசாரணை
இருப்பினும், விக்னேஷின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். இதனையடுத்து, துறை ரீதியிலான விசாரணை நடத்தப்பட்டுக் காவல் உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள் உள்ளிட்ட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள அதிமுக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தையும் கொண்டு வந்தது. டிஜிபி சைலேந்திபாபு உத்தரவைத் தொடர்ந்து, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

கொலை வழக்கு
இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் நேற்று மீண்டும் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், "தற்போது கிடைத்துள்ள விக்னேஷ் உடற்கூராய்வு முடிவுகளின்படி, அவருடைய உடலில் 13 இடங்களில் காயங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதனடிப்படையில், இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, காவலர்கள் மீது கொலை வழக்குப் பதியப்பட்டு, விசாரணை நடத்தப்படும்" என்றார்.

விசாரணை
இதைத் தொடர்ந்து, மரணம் நடந்த காவல்நிலையத்தில் விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார், அன்றைய தினம் பணியில் இருந்த 9 காவலர்களை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியது. அதன்படி 9 காவலர்களிடம் நேற்று (மே 6) காலை தொடங்கிய விசாரணை 10 மணி நேரத்திற்கு மேலாக நீட்டித்தது.
Recommended Video

இருவர் கைது
காவல் ஆய்வாளர்கள் புகழும் பெருமாள், கணபதி, காவலர்கள் பவுன்ராஜ், முனாப், தீபக், கார்த்திக், தலைமைக் காவலர் குமார், பெண் காவலர் ஆனந்தி, செந்தில்குமார் ஆகியோரிடம் இன்று காலை முதல் விசாரணை நடைபெற்றது. இதையடுத்து இந்த விவகாரத்தில் இரு காவலர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். எழுத்தர் முனாப், காவலர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications