ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ஆற்காடு சுரேஷின் தோழி பாஜக நிர்வாகி 'கஞ்சா' அஞ்சலைக்கு முக்கிய தொடர்பு?
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் திமுக நிர்வாகியின் மகன் சதீஷ், அதிமுக நிர்வாகி மலர்க்கொடி உள்ளிட்டோரும் அடக்கம். இதனிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் 'துணைவி' பாஜக நிர்வாகி புளியந்தோப்பு 'கஞ்சா' அஞ்சலைதான் முக்கிய குற்றவாளி என்கின்றன போலீஸ் வட்டாரங்கள்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். சென்னையில் கொல்லப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷ் படுகொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. இந்த கொலை தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 11 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இவர்களில் ரவுடி திருவேங்கடம் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் பலர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இவர்களில் திமுக நிர்வாகி ஒருவரது மகன் சதீஷ், அதிமுக நிர்வாகி மலர்க்கொடி ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜக நிர்வாகி புளியந்தோப்பு அஞ்சலை பெயர்தான் இப்போது அதிகமாக பேசப்படுகிறது.
வடசென்னையில் கஞ்சா விற்பனை தாதாவாக வலம் வருபவர் அஞ்சலை. கொல்லப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் காதலியாகவும் இருந்து பின்னர் திருமணமும் செய்து கொண்டவர். சென்னையில் 2019-ம் ஆண்டு அஞ்சலையை 'ரகசியமாக' சந்திக்க வந்த போது ஆற்காடு சுரேஷ் போலீசில் சிக்கி பின்னர் ஜாமீனில் வெளிவந்திருந்தார்.

இந்த அஞ்சலைதான் திடீரென பாஜகவில் இணைந்தார். தமிழ்நாடு பாஜகவின் வடசென்னை மாவட்ட மகளிர் அணி தலைவியுமானார் அஞ்சலை. அப்போதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பலரும் அஞ்சலையை நோக்கித்தான் கைகளை நீட்டுகின்றனராம். இதனால் அஞ்சலையின் அத்தனை தொடர்புகளும் இப்போது போலீசாரின் தீவிர வளையத்தில் இருக்கின்றனவாம்!
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும்












Click it and Unblock the Notifications