வசமாய் சிக்கிய விஷால் மச்சான்.. இப்படி போய் மாட்டிக்கிட்டாரே! இவ்வளவு பெரிய குடும்பமா அவரோடது? ஷாக்
சென்னை: நடிகர் விஷால் தங்கையின் கணவரும், பிரபல நகைக்கடை அதிபருமான உம்மிடி கிரிட்டிஸ் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. போலி ஆவணங்கள் மூலம் வீட்டுக்கடன் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாகவும், ரூ. 2.5 கோடி பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. சென்னையில் பாரம்பரியமிக்க உம்மிடி ஜுவல்லர் குடும்பத்தை சேர்ந்தவர் தான், கிரிட்டிஸ் என்ற நிலையில், திரையுலகிலும், தொழில் துறையிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்சன் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஷால். 2004 ஆம் ஆண்டு செல்லமே படத்தின் மூலம் நாயகன் அவதாரம் எடுத்த அவர் அதற்குப் பிறகு சண்டக் கோழி, திமிரு, தீராத விளையாட்டுப் பிள்ளை போன்ற பல ஹிட் படங்களை கொடுத்தார்.

இடையில் அவர் நடித்த படங்கள் படுமோசமாக சொதப்பியதால் வெற்றி தேவைப்பட்ட நிலையில் கடைசியாக வெளியான மார்க் ஆண்டனி, 13 ஆண்டுகள் கிடப்பில் கிடந்த மத கஜ ராஜா ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று விஷாலுக்கும் கம் பேக் கொடுத்ததுள்ளது.
தொடர்ந்து பல படங்களில் தற்போது விஷால் நடித்து வரும் நிலையில், தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கத்திலும் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். மேலும் கடந்த 2016ஆம் ஆண்டு ஆர்கே நகர் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக கூறி பரபரப்பையும் விஷால் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. விஷால் மட்டுமல்ல அவரது குடும்பத்தினரும் திரையுலகிலும் தொழில் துறையிலும் கொடி கட்டி பறந்து வருகின்றனர்.
அவரது அண்ணன் கிருஷ்ணா, அண்ணியார் ஸ்ரேயா ரெட்டி, தந்தை ஜிகே ரெட்டி என குடும்பமே திரைத் துறையில் தான் இருக்கிறது. மேலும் தொழில் துறையிலும் அவர்களது குடும்பம் பிரபலமாக இருக்கிறது. சென்னை மற்றும் ஆந்திராவில் விஷால் குடும்பம் தங்க நகை தொழில் செய்தி வருகிறது. அந்த வகையில் விஷாலின் தங்கை ஐஸ்வர்யா சில நகைக் கடைகளை நடத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது. அவர் உம்மிடி கிரிட்டிஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். விஷாலுக்கு மட்டும் இன்னும் திருமணம் ஆகாத நிலையில், அவரும் நகைக் கடை தொழிலையும் பார்த்துக் கொள்வதாக கூறப்படுகிறது
ஐஸ்வர்யா கடந்த 2019 ஆம் ஆண்டு உம்மிடி கிரிட்டிஸை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று இருக்கிறது. சென்னை மற்றும் ஆந்திராவில் பிரபலமான உம்மிடி குடும்பத்தை சேர்ந்தவர் தான் கிரிட்டிஸ். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட நாடாளுமன்றத்தில் செங்கோலை பிரதமர் மோடி வைத்தார் அல்லவா அதனை செய்து கொடுத்தது உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் தான்.
இவ்வளவு பாரம்பரிய மிக்க குடும்பத்தைச் சேர்ந்த உம்மிடி கிரிட்டிஸ் தற்போது சிபிஐ விசாரணை வளையத்தில் சிக்கி இருக்கிறார். வீட்டுக் கடன் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாகவும் இரண்டரை கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதை அடுத்து அவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. போலியான ஆவணங்கள் மூலம் பிரபலமான வங்கியில் ஐந்தரை கோடி ரூபாய் கடன் பெற்றதாக நில உரிமையாளர், கட்டுமான நிறுவனம், வங்கி அதிகாரிகள், வங்கி கடன் பெற்றவர்கள் என ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அதில் உம்மிடி கிரிட்டிஸும் சிக்கி உள்ளார்.












Click it and Unblock the Notifications