"575".. ஆ.ராசா மீது திரும்பிய போகஸ்.. டெல்லி அனுப்பிய 2 அம்புகள்.. பாஜகவின் "ஆபரேஷன் சவுத்" ஆரம்பம்?
சென்னை: திமுக எம்பி ஆ.ராசாவிற்கு எதிராக சிபிஐ அமைப்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சிபிஐ அமைப்பின் இரண்டு பெரிய வழக்குகளை அவர் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
இந்த இரண்டு வழக்குகள் பற்றியும் பார்ப்போம்!
வருமானத்துக்கு அதிகமாக 5.53 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவிற்கு எதிராக சிபிஐ, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ராசா, கடந்த 1999 முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 27 கோடியே 92 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

வழக்கு
அதாவது வருமானத்திற்கு அதிகமாக 575% சதவிகிதம் சொத்து சேர்க்கப்பட்டதாக இந்த புகாரில் கூறப்பட்டது. கடந்த 2015ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் ராசா மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட 16 பேருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னை, பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்திய சிபிஐ, பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியது. அவற்றின் அடிப்படையில்தான் இந்த வழக்கில் விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில்தான் தற்போது ஆ. ராசாவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

சொத்து குவிப்பு
வருமானத்துக்கு அதிகமாக 5 கோடியே 53 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் ராஜா உள்பட ஆறு பேருக்கு எதிராக சிபிஐ, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில், 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பான ஆவணங்களும் சேர்க்கப்பட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த வழக்கு ஒரு பக்கம் சூடு பிடித்துள்ள நிலையில்தான் இன்னொரு வழக்கும் கவனம் பெற்றுள்ளது.

வருமானத்திற்கு அதிகம்
அது 2ஜி வழக்கு ஆகும். கடந்த 2017ம் வருடம் 2ஜி வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீதிபதி ஓ.பி. சைனி வழங்கிய தீர்ப்பில் 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். 2ஜி வழக்கின் குற்றப்பத்திரிக்கையில் உண்மையில்லை. தேவையான சாட்சியங்கள் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்படவில்லை என்றும் நீதிபதி தீர்ப்பில் கூறினார். அதோடு ராசா மீதான எந்த தவறும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. சிபிஐ தரப்பு பல முக்கிய சாட்சியங்கள் நீதிமன்றத்திற்கு கொண்டு வரவில்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

2ஜி வழக்கு
இந்தத் தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் 2018, மார்ச் 19ஆம் தேதி அமலாக்கப் பிரிவும், சிபிஐயும் தனித்தனியாக மேல்முறையீடு செய்தன. இந்த 2 ஜி வழக்கில் தினசரி விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும், வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்று சிபிஐ அமைப்பு டெல்லி ஹைகோர்ட்டில் மனு அளித்துள்ளது. 5ஜி ஏலம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் எம்பி ஆ ராசா கேள்வி எழுப்பி இருந்த நிலையில் சிபிஐ 2ஜி வழக்கின் பக்கம் கவனத்தை திருப்பி உள்ளது.

இரண்டு வழக்குகள்
தினசரி விசாரணை அடிப்படையில் வாதங்கள் வைக்கப்பட வேண்டும். இந்த வழக்கில் தொடர்புடைய சிலர் வெளியே கொடுக்கும் பேட்டிகள், வாதங்கள் மத்திய அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. விடுதலை செய்யப்பட்ட சிலர் அளிக்கும் பேட்டிகள் எங்களை களங்கப்படுத்தும் வகையில் உள்ளது. இதனால் இந்த வழக்கில் தினசரி விசாரணை செய்ய வேண்டும். அதோடு உடனே தீர்ப்பை வெளியிட வேண்டும். இதில் தினசரி விசாரிக்க முடியாத பட்சத்தில் ஸ்பெஷல் பென்ச் உருவாக்க வேண்டும். உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு இதை தினமும் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.

டெல்லி போகஸ்
ஆனால் இதில் தினசரி விசாரணைக்கு பதிலாக வாரம் 2 நாள் உறுதியாக விசாரணை செய்ய டெல்லி ஹைகோர்ட் ஒப்புக்கொண்டது. இந்த நிலையில்தான் இன்னொரு பக்கம் தற்போது சொத்து குவிப்பு வழக்கும் போடப்பட்டு உள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறான அம்புகள் தற்போது ஆ ராசாவிற்கு எதிராக எய்தப்பட்டு உள்ளது. கடந்த சில வருடங்களாக வடஇந்தியா மாநிலங்களில் எதிர்க்கட்சியினர் பலர் சிபிஐ, அமலாக்கத்துறை ரெய்டுகளில் சிக்கி வந்தனர்.

சிபிஐ ஆபரேஷன் சவுத்
இதில் சிலர் கைதும் செய்யப்பட்டனர்,. முக்கியமாக மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை, சிபிஐ ரெய்டுகள் நடத்தப்பட்டன. இதில் வழக்கும் பதியப்பட்டது. மகாராஷ்டிராவிலும் அணில் தேஷ் முக், சஞ்சய் ராவத் உள்ளிட்டோர் இதேபோல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில்தான் தற்போது இந்த ஆப்ரேஷன் தெற்கு நோக்கி நகர்ந்து உள்ளது. இதனால் சிபிஐ, அமலாக்கத்துறை தெற்கில் கவனத்தை திருப்ப தொடங்கிவிட்டதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications