Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிடியை இறுக்கும் சிபிஐ.. சிக்கப் போகும் விஜய்யின் ’ரைட் ஹேண்ட்’..? கலக்கத்தில் பனையூர்! பரபர தகவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த வழக்கில், தவெக தலைவர் விஜய் இன்று இரண்டாவது முறையாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராகிறார் இதற்காக அவர் நேற்று மாலை தனி விமானம் மூலம் டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில், விஜயின் ஆலோசகராகக் கருத்தப்படும் ஜான் ஆரோக்கியசாமி விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளார். இதுவரை ஜான் ஆரோக்கியசாமி எந்த பொது நிகழ்விலும் தலைகாட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கரூரில் வேலுச்சாமிபுரத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கடும் நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.

TVK Vijay CBI

இந்த வழக்கில் ஏற்கெனவே டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளிடம் சுமார் 20 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

விஜய் சிபிஐ விசாரணை

அதேபோல், கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் சிபிஐ அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டு, கடந்த 12-ம் தேதி அவர் முதல் முறையாக டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜரானார். அப்போது, அவரிடம் அதிகாரிகள் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் 100-க்கும் மேற்பட்ட கேள்விகள் எழுப்பப்பட்டதாகவும், விஜய் அளித்த விளக்கங்களை எழுத்துப்பூர்வமாகவும், வீடியோ பதிவாகவும் சிபிஐ பதிவு செய்துகொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

கரூர் கூட்ட நெரிசல்

முதல் கட்ட விசாரணையின் போது விஜய் முழுமையான ஒத்துழைப்பு வழங்கியதாக கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், ஜனவரி 19-ம் தேதி மீண்டும் ஆஜராகுமாறு விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனை ஏற்று, நேற்று மாலை 4 மணியளவில் விஜய் தனி விமானம் மூலம் டெல்லி சென்றார். இன்று காலை சிபிஐ தலைமை அலுவலகத்தில் அவர் இரண்டாவது முறையாக விசாரணைக்கு ஆஜராக உள்ளார். இந்த கட்ட விசாரணையில் கேட்க வேண்டிய கேள்விகளின் பட்டியலை சிபிஐ அதிகாரிகள் முன்கூட்டியே தயாரித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

சிபிஐ விசாரணை

விசாரணை முடிந்ததும் இன்று இரவே சென்னை திரும்ப விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, கரூர் சம்பவம் நடந்த காலகட்டத்தில் சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் திருச்சி மத்திய மண்டல ஐஜியாக இருந்த ஜோஷி நிர்மல் குமார் ஆகியோரிடமும் கடந்த வாரம் சிபிஐ விசாரணை நடத்தப்பட்டது. இவர்களிடம் இன்று இரண்டாவது முறையாக மீண்டும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஜான் ஆரோக்கியசாமி

இந்த நிலையில், தவெக தலைவர் விஜய்யின் முக்கிய ஆலோசகரும், கட்சியின் தேர்தல் மற்றும் அரசியல் வியூகங்களை வகுப்பாளராக கருதப்படும் ஜான் ஆரோக்கிய சாமிக்கும் சிபிஐ சம்மன் அனுப்பி விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை எந்தப் பொதுக் கூட்டங்களிலும் அல்லது ஊடகங்களிலும் அவர் நேரடியாக தோன்றாத நிலையில், தற்போது சிபிஐ விசாரணை வளையத்துக்குள் அவர் வரக்கூடும் என்பதால், தவெக வட்டாரங்களில் பரபரப்பு அதிகரித்துள்ளது. அவருக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாவும், கரூர் பிரச்சாரத்தில் ஜானின் பங்கு குறித்து கேள்விகள் எழுப்பப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.மேலும், நாளை அல்லது நாளை மறுநாள் அவர் விசாரணைக்கும் ஆஜராகலாம் என தகவல்கள் கூறுகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+