Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கரூர் கூட்ட நெரிசல்! திட்டமிடப்பட்ட சதியா? செந்தில் பாலாஜியிடம் பல மணி நேரம் தொடர்ந்த சிபிஐ விசாரணை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூரில் விஜய் பிரச்சாரத்தின் போது 41 பேர் உயிரிழந்த விவகாரத்தை இப்போது சிபிஐ விசாரணை செய்து வருகிறது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே விஜய்யிடம் இரு முறை விசாரணை நடத்தப்பட்டுள்ள சூழலில், இப்போது செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. காலை ஆரம்பித்த இந்த விசாரணை, மாலை 5.30 மணிக்கே நிறைவடைந்ததாகத் தெரிகிறது.

தவெக என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய விஜய், சட்டசபைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தைக் கடந்தாண்டு தொடங்கினார். ஒவ்வொரு ஊருக்கும் நேரடியாகச் சென்ற விஜய், அங்குத் தனது பிரச்சார வாகனத்தில் இருந்தபடி மக்களிடையே பேசினார். அதன்படி அவர் கரூரில் பிரச்சாரம் செய்த போது மிக மோசமான ஒரு சம்பவம் அரங்கேறியது.

CBI questions Senthil Balaji over Karur stampede issue TVK alleges the incident as Conspiracy

கரூர் சம்பவம்

விஜய் வந்தபோது எதிர்பாராத விதமாகக் கூட்ட நெரிசல் அதிகரித்தது. மரக்கிளையில் எல்லாம் விஜய் ரசிகர்கள் ஏறியிருந்த சூழலில், அது உடைந்து விழுந்தது. இப்படி திடீர் கூட்ட நெரிசலால் சில மோசமான சம்பவங்கள் நடந்தது. இதன் காரணமாக அப்போது மொத்தம் 41 பேர் உயிரிழந்தனர். இந்தியாவில் பிரச்சார நிகழ்வில் இதுவரை இத்தனை பேர் உயிரிழந்ததே இல்லை. நாட்டில் நடந்த மிக மோசமான ஒரு சம்பவமாகவே இது பார்க்கப்பட்டது.

இந்த வழக்கை முதலில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என தவெக வழக்குப்போட்ட சூழலில், விசாரணை சிபிஐ வசம் சென்றது. இது தொடர்பாக பல்வேறு தரப்பினர் இடமும் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது. பொங்கல் சமயத்தில் விஜய்யிடம் முதற்கட்ட விசாரணையை சிபிஐ நடத்தியது. பிறகு மீண்டும் கடந்த வாரம் சிபிஐ இரண்டாம் கட்ட விசாரணையையும் நடத்தியது.

செந்தில் பாலாஜி

இந்தச் சூழலில் தான் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். டெல்லி சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜரான செந்தில் பாலாஜியிடம் கரூர் சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். கரூர் கூட்ட நெரிசல் திட்டமிட்ட சதியெனவும், செந்தில் பாலாஜிக்கு சதியில் தொடர்பு இருப்பதாகவும் த.வெ.க குற்றஞ்சாட்டி இருந்த நிலையில், அது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.

தவெக குற்றச்சாட்டு

கரூரில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் எனச் செந்தில் பாலாஜியை விமர்சித்துப் பாடிய பிறகு தான் நெரிசல் ஏற்பட்டதாக தவெக சொல்கிறது. மேலும், திருச்சி, நாமக்கல் என எங்கும் விஜய்யை பாதுகாப்பாக அழைத்துச் செல்லாத போலீசார், கரூரில் மட்டும் மிகவும் பாதுகாப்பாக அழைத்து வந்ததாகவும் கூறியுள்ளனர். கூட்ட நெரிசல் ஏற்பட்டுப் பாதிக்கப்பட்டவர்கள் தொலைவில் இருக்கும் மருத்துவமனைக்கே அழைத்து செல்லப்பட்டதாகவும் தவெக குற்றஞ்சாட்டுகிறது. மேலும், மாவட்ட ஆட்சியர், எஸ்பிக்கு முன்னதாக மருத்துவமனைக்குச் செந்தில் பாலாஜி நேரில் சென்றார் எனவும் தவெக கூறியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்துகிறது.

அமைச்சர் ரகுபதி

இதற்கிடையே செந்தில் பாலாஜியிடம் நடத்தப்படும் விசாரணை தொடர்பாகத் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரூர் சம்பவத்திற்குக் காரணமான தலைவர், செந்தில் பாலாஜி மீது சில குற்றச்சாட்டுகளைச் சொன்னார். இதன் காரணமாகவே அமலாக்கத் துறை செந்தில் பாலாஜியை அழைத்துள்ளனர். அதற்கு உரிய விளக்கம் அளிக்கக்கூடிய தைரியமும் ஆற்றலும் செந்தில் பாலாஜிக்கு உள்ளது. அங்குத் தேவையான விளக்கத்தைச் செந்தில் பாலாஜி தருவார்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+