Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜாபர் சாதிக்கிற்கு ஜாமீன் வழங்கலாமா? அமலாக்கத்துறையிடம் கேட்ட சிபிஐ சிறப்பு நீதிமன்றம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கின் ஜாமீன் மனுவிற்கு பதிலளிக்க, வரும் டிசம்பர் 2 ஆம் தேதி வரை அமலாக்கதுறைக்கு அவகாசம் வழங்கி சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து, கடந்த ஜூன் 26 ஆம் தேதி கைது செய்தது. பின்னர் அவரது சகோதரர் முகமது சலீம் ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.

jaffer sadiq enforcement directorate ameer


இந்த வழக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் 302 பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில், ஜாபர் சாதிக், அவரது மனைவி அமீனாபானு, ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம் மற்றும் திரைப்பட இயக்குனர் அமீர் உள்ளிட்ட 12 தனி நபர்களும், ஜாபர் சாதிக்கின் பட தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட 8 நிறுவனங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஜாபர் சாதிக் ஜாமீன் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட தன்னிடம் அமலாக்கத்துறை விசாரணை முடிவுற்று குற்றபத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இந்த ஜாமீன் மனு நீதிபதி எழில் வேலவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை தரப்பில், பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, பதில் மனு தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு டிசம்பர் 2 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+