நேரில் வாங்க! கரூர் கேசில் விஜய்க்கு சிபிஐ சம்மன்! நாளை மீண்டும் விசாரணை! காட்டிக்கொடுத்த போன் கால்
சென்னை: தமிழக வெற்றித் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்க்கு சி.பி.ஐ மீண்டும் ஒரு 'செக்' வைத்துள்ளது. கடந்த ஆண்டு கரூரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பான வழக்கில், மார்ச் 10-ஆம் தேதி (நாளை) நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சி.பி.ஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.
என்ன பின்னணி?
கடந்த 2025 செப்டம்பர் 27 அன்று கரூரில் த.வெ.க சார்பில் நடத்தப்பட்ட பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட பயங்கர நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

ஏன் இந்த சம்மன்?
கடந்த ஜனவரி மாதம் டெல்லி சி.பி.ஐ அலுவலகத்தில் வைத்து விஜய்யிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு அவர் தாமதமாக வந்தது ஏன்? பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏற்பட்ட குளறுபடிகள் யாருடைய தவறு? என்பது குறித்து ஏற்கனவே கேள்விகள் எழுப்பப்பட்டன. தற்போது இறுதிக்கட்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யும் முனைப்பில் இருக்கும் சி.பி.ஐ, சில முக்கியத் தகவல்களை உறுதிப்படுத்த விஜய்க்கு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.
அரசியல் மல்லுக்கட்டு
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், த.வெ.க-வின் எழுச்சியைத் தடுக்கவே இந்த 'சி.பி.ஐ அஸ்திரம்' ஏவப்படுவதாக அக்கட்சியினர் கொந்தளிக்கின்றனர். ஏற்கனவே கரூர் வழக்கில் விஜய் சாட்சி என்பதில் இருந்து சந்தேகத்திற்கு உரியவராக மாறி உள்ளார் என்று கூறப்படுகிறது. அதாவது witness என்று அழைக்கப்பட்ட விஜய் அவரின் பதில்கள் காரணமாக suspect என்று மாறியதாக கூறப்படுகிறது.
விஜய் அளித்த பதில்களே இதற்கு காரணம். முக்கியமாக திருச்சியில் இருந்து விஜய் கரூர் வர தாமதம் ஆனது ஏன் என்று கேள்வி கேட்கப்பட்டது என்று கூறப்படுகிறது.. இதற்கு விஜய் ரோடு வளைவு நெளிவாக இருந்தது என்று கூறி உள்ளார். அந்த சாலையில் தேசிய ஹைவே இருந்தும் கூட விஜய் இதை கூறி உள்ளார் என்று கூறப்படுகிறது.
அதற்கு சிபிஐ.. உங்கள் வாகனம் 1 மணி நேரம் இடையில் நின்று இருக்கிறது. உங்கள் போன் சாட்டிலைட் தகவல்கள், அதை உறுதி செய்கின்றன. உங்கள் வாகனம் 1 மணி நேரம் நகராத நேரத்தில் நீங்கள் போனில் பேசி உள்ளீர்கள். அதற்கான ரெக்கார்ட் உள்ளது. அந்த 1 மணி நேரம் ஏன் வாகனத்தை நிறுத்தி இருந்தீர்கள்? எங்கே இருந்தீர்கள்? என்று சிபிஐ கேட்டதாக கூறப்படுகிறது.
விஜய் - சிபிஐ விசாரணை
இதன் காரணமாகவே witness என்று அழைக்கப்பட்ட விஜய் அவரின் பதில்கள் காரணமாக suspect என்று மாறியதாக கூறப்படுகிறது. கரூர் துயரம் தொடர்பான சிபிஐ வழக்கு விசாரணையில்.. போலீசார் சொன்னபடியே நடந்தேன், விதிகளை மீறவில்லை என்று விஜய் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதை சிபிஐ ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
கரூர் துயரம் தொடர்பான வழக்கின் குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. FIRல் விஜய் பெயர் இல்லாத நிலையில் சிபிஐ விசாரணை அடிப்படையில் பெயர் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிபிஐ விசாரணையில், சம்பவம் நடத்த இடத்திற்கு நீங்கள் தாமதமாக சென்றது ஏன்? கீழே பிரச்சனை நடப்பது உங்களுக்கு தெரியாதா? அபாயத்தை தடுக்க என்ன முயற்சி எடுத்தீர்கள்? அவ்வளவு கூட்டம் இருந்த போது அதற்குள் ஏன் வாகனத்தை கொண்டு சென்றீர்கள்?
நெரிசல் அபாயம் இருப்பதாக எப்போது உணர்ந்தீர்கள்? கீழே பிரச்சனை இருப்பது உங்களுக்கு தெரியுமா தெரியாதா? போலீஸ் வேண்டாம் என்று சொன்ன போதும்.. அதை மீறி உள்ளே ஏன் சென்றீர்கள்? என்று சிபிஐ அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்த கேள்விகளுக்கு விஜய் அளித்த பதிலின் அடிப்படையில்தான் இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
போலீசார் உங்களிடம் எப்போது போக சொன்னார்கள்? போலீசார் சொன்னபடி செய்தீர்களா? கீழே ஆம்புலன்ஸ் வரும் சூழல் இருந்த போது நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்? ஆம்புலன்ஸ் வரும் போதே ஏன் நீங்கள் பேச்சை நிறுத்தவில்லை? நீங்கள் சொல்வதற்கான ஆதாரங்கள் இருக்கிறதா ? என்றெல்லாம் சிபிஐ கேள்விகளை எழுப்பி உள்ளது.
விஜய் அளித்த பதில்
கரூர் துயரம் தொடர்பான சிபிஐ வழக்கு விசாரணையில்.. போலீசார் சொன்னபடியே நடந்தேன், விதிகளை மீறவில்லை என்று விஜய் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதை சிபிஐ ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
விஜய் அளித்த பதிலில்.. நான் போலீஸ் அளித்த விதிப்படியே நடந்து கொண்டேன். இதில் விதிகளை எங்கும் மீறவில்லை. போலீஸ் கூட்டத்தை சரியாக கையாளவில்லை என்று போலீஸ் மீது திருப்பும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. ஆனால் இதை சிபிஐ ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்தே போலீசார் உங்களிடம் எப்போது போக சொன்னார்கள்? போலீசார் சொன்னபடி செய்தீர்களா? என்று சிபிஐ கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
-
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
“விஜய் முதலில் மன்னிப்பு கேட்கணும்”.. பதில் சொல்ல வக்கு இல்லையா? பொன்ராஜ் கொடுத்த ரிப்ளை! -
டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் போன விஜய்.. பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு! -
கட்டம் கட்டிய திமுக.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை.. கலங்கி வீடியோ வெளியிட்ட தவாக வேல்முருகன் -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
பாஜக பெயரை சொல்லவே சாகிறார்.. இவரா முதலமைச்சர்.. விஜய்யை வெளுத்து வாங்கிய கீதா ஜீவன் -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
காங்கிரஸில் இருந்து சஸ்பெண்ட்! அடுத்த நாளே விஜய்யை சந்தித்த பிடி செல்வம்! தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications