சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரிசல்ட் எப்போது? வெளியானது அப்டேட்
சென்னை: சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வரும் 20 ஆம் தேதிக்கு பிறகு வெளியிடப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியான பிறகு தேர்வு முடிவுகளை மாணவர்கள் Cbse.nic.in,cbse.gov.in அல்லது cbseresults.nic.in ஆகிய இணையதளங்கள் அறிந்து கொள்ளலாம்..
மத்திய இடை நிலைக் கல்வி வாரியம் எனப்படும் சிபிஎஸ்இ - வாரியம் மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு பள்ளிகள் இயங்கி வருகின்றன. சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியருக்கு கடந்த மார்ச் - ஏப்ரல் மாதங்களில் பொதுத் தேர்வு நடைபெற்றது.

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதி தொடங்கி மார்ச் 13ம் தேதி வரையிலும், 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 2ம் தேதி வரையிலும் நடைபெற்று முடிந்தது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்கள் ஆர்வத்துடன் இந்த தேர்வை எழுதினர்.
தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், வினாத்தாள் திருத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்றது. பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களும் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் தான், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வரும் 20 ஆம் தேதிக்கு பிறகு வெளியிடப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியான பிறகு தேர்வு முடிவுகளை மாணவர்கள் Cbse.nic.in,cbse.gov.in அல்லது cbseresults.nic.in ஆகிய இணையதளங்கள் அறிந்து கொள்ளலாம்.. தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை பார்க்க முடியும்.
மாணவர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் முதல் மதிப்பெண் பெற்றவர்களின் விவரங்களை சிபிஎஸ்இ வெளியிடாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் குறைந்தது 33 சதவிகித மதிப்பெண்கள் பெற வேண்டும்.
சிபிஎஸ்இ இதுவரை தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எனினும், இந்த மாதத்திலேயே வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications