பள்ளிக் கட்டணத்தை இனி மறைக்க முடியாது.. சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு கிடுக்குப்பிடி.. பெற்றோரே உஷார்!
டெல்லி: சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு கடிவாளம் போடும் வகையில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் முக்கியமான உத்தரவை போட்டுள்ளது. இன்னும் 30 நாட்களில் சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகம் தங்கள் பள்ளி தொடர்பான அத்தனை விவரங்களையும் அந்தந்தப் பள்ளியின் இணையதளத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
தை மாதம் பிறந்துள்ள சூழலில், பெற்றோர் பலரும் தங்களின் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கான பணிகளை தொடங்கி இருக்கின்றனர். பள்ளியில் சேர்ப்பதற்கான விண்ணப்பம், பள்ளிக் கட்டணம், பேருந்து கட்டணம், பள்ளியின் உட்கட்டமைப்பு உள்ளிட்ட எந்தவித விஷயங்களையும் பள்ளிகள் வெளியிடாமல் இருப்பதாக சில புகார்கள் எழத் தொடங்கிவிட்டன.

அந்த புகார்களை களையும் பட்சத்தில் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி இனி பள்ளி தொடர்பான அத்தனை விவரங்களையும் அந்தந்த பள்ளிகள் இணையதளத்தில் வெளியிட்டு பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக பள்ளியின் இணையதளத்தில் Mandatory Public Disclosure என்ற பெயரில் தனியாக ஒரு லிங்க் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி பள்ளியில் வசூலிக்கப்படும் முழு கட்டணமும் வெளிப்படையாக கூறப்பட்டிருக்க வேண்டும். அட்மிஷனின் போது ஒரு கட்டணத்தையும், பின்னர் ஒரு கட்டணத்தையும் இனி பெற முடியாது.
அதேபோல் பள்ளியின் கட்டமைப்பை முழுமையாக வெளிப்படுத்தி இருக்க வேண்டும். அதாவது பள்ளியின் ஆய்வகங்கள், விளையாட்டு மைதானம், இணைய வசதி, பேருந்து வசதி, விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்டவை குறித்து கூறப்பட்டிருக்க வேண்டும். அதேபோல் தீயணைப்பு சான்றிதழ், கட்டட உறுதித்தன்மை சான்றிதழ், சுகாதாரம் மற்றும் குடிநீர் சான்றிதழ் ஆகியவை அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்பதை தெரிவிக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் பள்ளியின் ஆசிரியர்கள் எண்ணிக்கை, அவர்களின் கல்வித் தொகுதி தொடர்பான விவரங்களை பதிவிட வேண்டும். அதேபோல் மாணவர்கள் எண்ணிக்கையை கண்காணிக்கவும் ஒவ்வொரு வகுப்பிலும் எத்தனை மாணவர்கள் படிக்கிறார்கள் என்ற விவரங்களை பதிவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அத்தனை விவரங்களையும் சிபிஎஸ்இ பள்ளிகள் இன்னும் 30 நாட்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 30 நாட்களில் விவரங்களை வெளியிடாத பள்ளிகள் மீது சிபிஎஸ்இ இணைப்பு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் இனி பெற்றோர் ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று பள்ளியின் கட்டணம், மாணவர்கள் எண்ணிக்கை, ஆசிரியர்களின் கல்வித் தொகுதி உள்ளிட்டவை தொடர்பாக நேரில் சென்று விசாரிக்க வேண்டிய அவசியமே இல்லை. ஒவ்வொரு பள்ளியின் இணையதளத்தில் Mandatory Public Disclosure என்ற லிங்க் மூலமாக வீட்டில் இருந்தவாறே அறிந்து கொள்ள முடியும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications