சோர்வாக நடந்து வந்த தீபா! கதவை உடைத்தது யார்? தற்கொலையில் நீடிக்கும் மர்மம்.. பரபர சிசிடிவி வீடியோ
சென்னை: சினிமா நடிகை தீபா மௌலி தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.
ஆந்திராவை சேர்ந்தவர் மௌலி என்கிற தீபா. சினிமாவில் நடிப்பதற்காக இவர் சென்னையில் விருகம்பாக்கத்தில் உள்ள அப்பார்ட்மெண்ட் ஒன்றில் வசித்து வந்தார். துப்பறிவாளன், தெறி, ராட்சசன் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.
சமீபத்தில் வாய்தா என்ற படத்தில் இவர் ஹீரோயினாக நடித்தார். சினிமாவில் இவர் வாய்ப்பு தேடி வந்த நிலையில் திடீரென சனிக்கிழமை இரவு தீபா தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
இவரின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் தனது வீட்டில் ஷாலில் தூக்கு மாட்டி தொங்கி உள்ளார்.

சந்தேகம்
இந்த மரணத்தில் இரண்டு பேர்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது. முதல்கட்ட தகவலின்படி வீட்டு ஓனர், தீபாவின் வீட்டு கதவை தட்டியதாக கூறப்பட்டது. தீபா கதவை திறக்காத காரணத்தால் சந்தேகம் அடைந்து கதவை உடைத்த ஓனர், உள்ளே இறந்த நிலையில் தீபா இருந்ததை பார்த்ததாக கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகி உள்ள தகவலின்படி தீபாவின் நண்பர் ஒருவர்தான் தீபாவை தேடி அவரின் வீட்டிற்கு சென்றார் என்று கூறப்படுகிறது. அவர்தான் தீபா கதவை தட்டி உள்ளார், தீபா திறக்காத காரணத்தால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றார் என்று கூறப்படுகிறது.

பிரபாகரன்
தீபாவின் நண்பர் பெயர் பிரபாகரன் என்று கூறப்படுகிறது. போலீசார் இவரிடம் தீவிர விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. தீபாவின் உறவினர்கள் இவர் மீதுதான் சந்தேகம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்தான் தீபாவின் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று தீபாவின் அண்ணன் போலீசில் தகவல் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது. அதே சமயம் தீபா சனிக்கிழமை இரவு சாகும் முன் ஒரு நபருடன் போனில் பேசி உள்ளார்.

காதலன்
அந்த நபர் தீபாவின் காதலன் சிராஜிதான் என்று தெரிய வந்துள்ளது. இவர்கள் இருவரும் சண்டை போட்டு, அதனால் தீபா இறந்து இருப்பாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் அதற்கு முதல்நாள்தான் தீபா தனது குடும்பத்தினருடன் சந்தோசமாக , இயல்பாக பேசி இருக்கிறார். அதனால் அவரின் காதலின் மீதும் சந்தேகம் திரும்பி உள்ளது. இவரையும் போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் தற்போது தீபாவின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

சந்தேகம் சிசிடிவி
அதன்படி தீபா தனது வீட்டிற்கு செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கீழ் தளத்தில் இருந்து அவர் படியில் செல்வது போல இந்த காட்சிகள் உள்ளன. அதில் அவர் மிகவும் சோர்வாக காணப்படுகிறார். சனிக்கிழமை மாலை எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆகும் இவை. அன்று நடு இரவில்தான் தீபா தற்கொலை செய்து கொண்டார். இந்த சிசிடிவியில் வேறு யாரும் அந்த வீட்டிற்கு வந்துள்ளனரா என்று போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications