சூப்பர்.. "இது" மட்டும் வேணாமே.. புகையில்லா போகி பண்டிகை.. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நச்
சென்னை: ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப் எரிக்கக் கூடாது... புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட பொதுமக்களுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அத்துடன், அடர் புகையை வெளியிடும் பொருட்களை எரிக்காமல் புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிக்கை இதுதான்: பொங்கல் திருநாளுக்கு முன் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் நமது முன்னோர்கள் போகி பண்டிகையை கொண்டாடி வந்துள்ளனர்.

சுற்றுச்சூழல்: அதன்படி, இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை தீயிட்டுகொளுத்தி வந்துள்ளனர். இச்செய்கையால் காற்று மாசுபடாமல் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் இருந்து வந்துள்ளது.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் போகி பண்டிகையின்போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர்மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு, போகி அன்று எரிக்கப்படும் பொருட்களால் ஏற்படும் அடர்ந்த புகை காரணமாக விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது.
நச்சு வாயுக்கள்: சென்னை நகரில் போகி அன்று எரிக்கப்படும் மேற்படி பொருட்களால் ஏற்படும் அடர் புகையால் புகை மண்டலம் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாகஉள்ளது. மேலும், அடர் நச்சுவாயுக்களால் மூச்சுத் திணறல், கண் எரிச்சல்போன்ற பாதிப்புகளும் பொதுமக்களுக்கு ஏற்படுகிறது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கடந்த 19 ஆண்டுகளாக போகி பண்டிகைக்கு முன் பொதுமக்களிடைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதன் காரணமாக கடந்த ஆண்டுகளில் அடர் புகையை ஏற்படுத்தும் பொருட்களை எரிப்பது பெரும்பாலும் குறைந்துள்ளது. இந்த ஆண்டும் பொதுமக்கள் புகையில்லா போகி பண்டிகையைக் கொண்டாட வேண்டும்.
இணையதளம்: போகி பண்டிகையின்போது சென்னையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், போகி பண்டிகைக்கு முந்தைய நாள் மற்றும் போகி நாளன்று 15 இடங்களில் 24 மணிநேரமும் காற்றுதரத்தை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications