சென்னை- பெங்களூர் வந்தே பாரத்தில் வெடித்து சிதறிய செல்போன்.. சார்ஜ் போட்ட போது விபரீதம்.. பகீர்
சென்னை: சென்னையில் இருந்து மைசூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயிலில் பயணி ஒருவர் தனது செல்போனை சார்ஜ் போட்டிருந்தார். இதற்கிடையே அந்த செல்போன் திடீரென வெடித்துச் சிதறியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஜோலார்பேட்டை இருப்புப் பாதை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்தக் காலத்தில் மொபைல் என்பது நமது வாழ்க்கையில் தவிர்க்கவே முடியாத ஒன்றாகிவிட்டது. வெளியே செல்லும் போது கட்டாயம் எடுத்துச் செல்லும் ஒன்றாக செல்போன் இருக்கிறது.

ஆனால், கடந்த சில காலமாகவே சார்ஜ் போடப்பட்டு இருக்கும் செல்போன்கள் திடீர் திடீரென வெடித்துச் சிதறும் சம்பங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கிடையே மீண்டும் அப்படியொரு ஷாக் சம்பவம் தான் இப்போது மீண்டும் நடந்துள்ளது.
ரயில்: இதனால் பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு இடங்களிலும் செல்போன் சார்ஜ் போடும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அப்படி தான் ரயில்களில் செல்போன் சார்ஜ் போடும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறை ஓடும் ரயிலில் சார்ஜ் போட்டிருந்த மொபைல் வெடித்துச் சிதறி இருக்கிறது. நல்வாய்ப்பாக இது பெரிய விபத்தாக மாறவில்லை. ரயில் மட்டுமே சுமார் 35 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பெங்களூர் வழியாக மைசூருக்கு தினசரி வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் இன்றைய தினம் 31 வயதான குஷ்நாத்கர் பயணித்துள்ளார். அவர் வந்தே பாரத்தில் C11 பெட்டியில் பயணம் செய்துள்ளார். தனது மொபைலில் சார்ஜ் குறைவாக இருக்கவே அவர் ரயிலில் தனது செல்போனை சார்ஜ் போட்டுள்ளார்.
வந்தே பாரத்: சுமார் 8 மணியளவில் வந்தே பாரத் ரயில் திருப்பத்தூர் அடுத்துள்ள ஆம்பூரைக் கடந்து சென்று கொண்டு இருந்துள்ளது. அப்போது யாருமே எதிர்பார்க்காத வகையில் திடீரென செல்போன் வெடித்துச் சிதறியுள்ளது. இதைப் பார்த்ததும் குஷ்நாத்கர் அலறியுள்ளார். மேலும், செல்போன் வெடித்தால் அங்குப் புகையும் கிளம்பியுள்ளது. இதனால் அதிர்ந்த ரயில் பயணிகள் கூச்சலிட்டனர். இதையடுத்து ரயில் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து சி11 மற்றும் 12 பெட்டிகளில் கதவுகளைத் திறந்து ரயில்வே ஊழியர்கள் புகையை வெளியேற்றினர். மேலும், ரயிலில் இருந்த மின் இணைப்புகள் சரியாக வேலை செய்வதையும் உறுதி செய்தனர். அதன் பிறகு சுமார் குறித்தும் ஆய்வு செய்தனர். அனைத்தும் சரி செய்யப்பட்ட பின், சுமார் 35 நிமிடங்கள் கழித்து, 8.40 மணி அளவில் மீண்டும் கிளம்பியது. அதன் பிறகு மைசூர் செல்லும் வரை எந்தவொரு பிரச்சினையும் இல்லை.
வெடித்துச் சிதறிய செல்போன்: இருப்பினும், ஓடிக் கொண்டு இருக்கும் ரயலில் சார்ஜ் போடப்பட்டு இருந்த மொபைல் திடீரென வெடித்துச் சிதறியது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. நல்வாய்ப்பாக இதில் குஷ்நாத்கர் உட்பட யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை. செல்போன் வெடித்துச் சிதறிய நிலையில், அது மிகப் பெரிய விபத்தாகக் கூட மாறி இருக்கலாம். இருப்பினும், நல்வாய்ப்பாக அதுபோல எதுவும் நடக்கவில்லை. இது தொடர்பாக ஜோலார்பேட்டை இருப்புப் பாதை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications