பொட்டலத்தை ஆசை ஆசையாக பிரித்தால்.. அதென்ன சிவப்பு நிறத்தில்.. பார்சல் டெலிவரியால் சென்னையில் பரபரப்பு
சென்னை: சென்னையை சேர்ந்த நபர் ஒருவர் புதிதாக செல்போன் வாங்குவதற்காக ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார்.. அப்போதுதான், இப்படியொரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
சென்னையை சேர்ந்தவர் நாராயணன்... இவருக்கு 38 வயதாகிறது.. அரும்பாக்கத்தில், பார்சல் சர்வீஸ் நிறுவனத்தை நடத்தி வருபவர் இவரது நிறுவனத்திலிருந்து கஸ்டமர்களுக்கு டெலிவரி செய்யும் பொருட்களுக்கு பதில், செங்கல்லை வைத்து டெலிவரி செய்துவிடுவதாக புகார் வந்தது.

புகார்கள்: அதாவது, செங்கல் அல்லது பெரிய கற்களை வைத்து பார்சல் டெலிவரி செய்துவிடுவதாக நாராயணனுக்கு நிறைய புகார்கள் வந்திருக்கின்றன.. நேற்றுகூட, 10 லட்சம் மதிப்புள்ள 13 மொபைல்போன், ஒரு லேப்டாப் திருடப்பட்டதை கண்டு நாராயணன் அதிர்ந்தார்.. எனவே, கடந்த ஜூனில் அரும்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.
அதேபோல, வாடிக்கையாளர்கள் தரும் புகார்களை வைத்து, சம்பந்தப்பட்ட ஆன்லைன் நிறுவனத்தின் மேலாளரும் அரும்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்..
மொபைல்போன்: இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த அரும்பாக்கம் போலீசார், மாயமான மொபைல்போன்களின் ஐ.எம்.இ.ஐ., நம்பரை வைத்து போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போதுதான், பார்சல் நிறுவனத்திலேயே பணிபுரியும் ஓட்டேரியை சேர்ந்த தினேஷ் என்ற 20 வயது இளைஞர் அதனை பயன்படுத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து, டெலிவரி ஏஜென்ட்களில் ஒருவரான தினேஷை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அப்போது தினேஷ் சொன்னதை கேட்டு போலீசார் அதிர்ந்தனர்.. வாடிக்கையாளர்களுக்கு செல்போன்களை டெலிவரி செய்ய போகும்போது, சிலர் வீட்டில் இருப்பதில்லையாம்.. அதனால், அந்த பார்சலை பிரித்து மொபைல் போன்களை வெளியே எடுத்துவிட்டு, அதற்குள் செங்கல்லை வைத்துவிடுவாராம். இந்த பார்சலை, மறுபடியும் நிறுவனத்திலேயே ஒப்படைத்துவிடுவாராம்..
டெலிவரி பார்சல்: பார்சலில் இருப்பது செங்கல் என்பதை தெரியாத வேறு டெலிவரி ஏஜெண்ட், அடுத்த முறை அதைக் கொண்டுபோய், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரிடம் தந்துவிடுவாராம். வேறு வேறு ஊழியர்கள் டெலிவரி பணியில் ஈடுபட்டுள்ளதால், தினேஷ் மீது யாருக்கும் சந்தேகம் வராமல் இருந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், திருடிய செல்போன், லேப்டாப்களை மலிவு விலைக்கு விற்று பணத்தை அள்ளியுள்ளார் தினேஷ்.. இதற்கு அஜித் என்ற 25 நபரும் உடந்தையாக இருந்துள்ளார்.. இதையடுத்து, இருவரிடமிருந்து 4 செல்போன்கள் உட்பட 13க்கும் மேற்பட்ட திருட்டுப்பொருட்களை போலீசார் மீட்டுள்ளனர்..
செல்போன்: செல்போனுக்கு பதிலாக செங்கல்லை வைத்து டெலிவரி செய்யப்படுவது இது முதல்முறையில்லை.. இதற்கு முன்பு ஏராளமான சம்பவங்கள் இந்திய அளவில் நடந்துள்ளன.. 2 வருடங்களுக்கு முன்பு, மேற்கு வங்கம் மால்டா உத்தர் தொகுதியின் பாஜக எம்பி காகென் முர்மூவின் மகனுக்கும் இப்படியொரு நிலைமை ஏற்பட்டது.
அவ்வளவு ஏன்? சில மாதங்களுக்குமுன்பு , சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவி நித்திலா தேவி, ஸ்நாப்டீல் வெப்சைட்டில் மாலூம் செல்போனை ஆர்டர் செய்துள்ளார் . 12000 மதிப்பிலான, அந்த மொபைல் போனை பெறுவதற்கு, முன்னதாகவே ஆன்லைனில் பணமும் கட்டிவிட்டார்.
அதிர்ச்சி சம்பவம்: இவருக்கு போன் டெலிவரி செய்யப்பட்டதுமே, அந்த பார்சலை பிரித்தபோது, செல்போனுக்கு பதிலாக செங்கல் இருந்துள்ளது.. இதற்கு முன்புகூட, ஐபோனுக்கு பதிலாக மார்பில் கற்கள் வைத்து அனுப்பப்பட்ட சம்பவங்கள் தமிழகத்தில் நிறைய நடந்துள்ளன.. ஆன்லைன் வர்த்தகம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இது போன்ற சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன..!!!












Click it and Unblock the Notifications