எந்த விஷயமும் வெளியே போகக்கூடாது.. அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் செல்போனுக்கு தடை!
Recommended Video
சென்னை: அதிமுக ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் செல்போன் வைத்திருக்க தடை விதிக்கப்பட்டது.
அதிமுக கட்சியின் நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பங்கேற்றனர்.

தேர்தல் முடிவுகள்
அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கை வலுத்ததை அடுத்து கட்சி தலைமை இந்த கூட்டத்திற்கு முடிவு செய்தது. இந்நிலையில் நடந்து முடிந்த கூட்டத்தில் தேர்தல் முடிவுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

செல்போனுக்கு தடை
முன்னதாக கூட்டத்தில் பங்கேற்பவர்கள் செல்போனை உள்ளே கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதேபோல் கேமராக்களை உடன் கொண்டுசெல்லவும் தடைவிதிக்கப்பட்டது.

ஸ்லிப்பர் செல்கள்
கூட்டத்தில் விவாதிக்கப்படும் விஷயங்கள் வெளியே செல்வதை தடுக்கும் வகையில் அதிமுக தலைமை இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. ஏற்கனவே கட்சிக்குள் ஸ்லிப்பர் செல்கள் இருப்பதாக டிடிவி தினகரன் கூறி வருகிறார்.

வெளியே கசியாமல் இருக்க
அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் உட்கட்சி பூசலை தமிழகமே உற்று நோக்கி வருகிறது. கட்சி தலைமையில் மாற்றம் வருமா? கட்சி யாருடைய கட்டுப்பாட்டுக்குள் வரும் என்ற எதிர்பார்ப்பு நீடித்து வரும் நிலையில் கட்சி விஷயங்கள் வெளியே கசியாமல் இருக்க தலைமை செல்போனுக்கு தடைவிதித்தது குறிப்பிடத்தக்கது.
-
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
NDA Alliance: தமிழகத்தில் பாஜக 27 தொகுதிகளில் போட்டி? அதிமுக அதிரடி? காங்கிரஸை விட குறைவாச்சே! -
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி












Click it and Unblock the Notifications