புயல் பாதித்த புதுக்கோட்டையில் மத்திய குழு ஆய்வு..கதறியடி குறைகளைச் சொன்ன மக்கள்
Recommended Video

புதுக்கோட்டை: கஜா பாதித்த புதுக்கோட்டை மாவட்டத்தில் மத்திய குழு இன்று ஆய்வு மேற்கொண்டது.
கஜா புயலால் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் கடும் அழிவை சந்தித்துள்ளன. இந்த பேரழிவுகளுக்கு மத்திய அரசிடம் ரூ. 15000 கோடி நிவாரணமாக தமிழக அரசு கோரியுள்ளது.

இதையடுத்து புயல் பாதித்த இடங்களில் ஆய்வு மேற்கொள்ள மத்திய உள்துறை இணைச் செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான குழு தமிழகம் வந்துள்ளது. இக்குழுவில் உறுப்பினர்களாக கவுல், வாஸ்தவா, ஹர்ஷா, இளவரசன், மாணிக் சந்திரா, வந்தனா சிங்கால் என மொத்தம் 7 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் நேற்று இரவு வந்தனர்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து இன்று மாலை புதுக்கோட்டையில் மத்திய குழுவினர் ஆய்வு செய்யவுள்ளனர்.
மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை குழுவினர் சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்து பின்னர் காரில் புதுக்கோட்டை சென்றனர். புதுக்கோட்டையில் குளத்தூர் பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழு ஆய்வு மேற்கொண்டது.

முதலாவதாக புதுக்கோட்டையில் ஆய்வு செய்ய உள்ள மத்திய குழுவினர் கந்தர்வகோட்டை பகுதியில் அருந்ததியர் காலனி, சோழகம்பட்டி, பழைய கந்தர்வகோட்டை, புதுநகர், முதுகுளம், உரியம்பட்டி, நெற்புகை, வீரடிபட்டி உள்ளிட்ட 8 இடங்களை பார்வையிட்டு ஆய்வு அங்குள்ள மக்களிடமும் குறைகளை கேட்டார்கள்.
ஆய்வுக்கு பின் செய்தியாளரிடம் டேணியல் ரிச்சர்ட் கூறுகையில், தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து நவம்பர் 27ம் தேதி மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார்.
இரவிலும் தொடர்ந்த ஆய்வு
இரவு 7 மணி வரையிலும் ஆய்வு விடாமல் தொடர்ந்தது. தொடர்ந்து பல்வேறு ஊர்களுக்கு மத்திய குழுவினர் சென்று பார்த்து ஆய்வு நடத்துகின்றனர். இருப்பினும் சாலையோரமாகவே அவர்கள் போய் வருவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒவ்வொரு இடத்திலும் குறைந்தது அரை மணி நேரம் வரை ஆய்வுக் குழுவினர் செலவிட்டனர். அவர்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர், லோக்சபா துணைத் தலைவர் தம்பிதுரை ஆகியோர் உடன் உள்ளனர். பொதுமக்கள் பெரிய அளவில் இவர்களை நெருங்க விடவில்லை. இதனால் சில இடங்களில் மக்கள் சத்தம் போட்டதைக் காண முடிந்தது.
மத்திய குழுவினர் மேலோட்டமாகவே பார்வையிட்டு வருவதாகவும், பல முக்கிய இடங்களுக்கு அவர்கள் செல்லவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன.
நாளை பிற மாவட்டங்கள்:
புதுக்கோட்டையில் முதற்கட்ட ஆய்வை இன்று தொடங்கிய மத்திய குழு, தஞ்சை மாவட்டத்தில் நாளை புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்கிறது. நாளை மறுநாள் அதாவது திங்கள்கிழமை திருவாரூர் மற்றும் நாகையில் ஆய்வு மேற்கொள்கின்றனர். அன்றைய தினம் மாலை நாகையிலிருந்து காரைக்காலுக்கு சென்று காரைக்காலிலும் ஆய்வு செய்கின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications