செந்தில் பாலாஜி வழக்கில் திடீர் திருப்பம்.. மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் நாகஜோதி இடமாற்றம்
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கை விசாரித்த மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் நாகஜோதி மாற்றப்பட்டுள்ளார். அவரிடம் இருந்த அனைத்து பொறுப்புகளும் புதிய துணை ஆணையர் ஸ்டாலினிடம் வழங்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ 1.62 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. இது குறிதது சென்னையை சேர்ந்த கணேஷ்குமார் உள்ளிட்டோர் சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தனித்தனியாக 3 வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கு விசாரணையை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனராக இருந்த நாகஜோதி மேற்கொண்டு வந்தார்.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு இருந்த போது கூட செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு விசாரணை குறித்து தலைமைச் செயலகத்தில் கூட்டம் நடந்த போதெல்லாம் நாகஜோதியும் அந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக அவர் இந்த வழக்கு விசாரணையை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு விடுதலை அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அதை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதில் தமிழ்நாடு காவல் துறை விசாரணை நடத்தி 2 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அமலாக்கத் துறை விசாரணை நடத்த அனுமதி வழங்கியும் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அமலாக்கத் துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய மேலும் 6 மாத காலம் அவகாசம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணையில் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் தமிழ்நாடு காவல் துறை விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்த சூழலில் செந்தில் பாலாஜி வழக்கில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை அதிகாரியாக இருந்து வந்த நாகஜோதி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நாகஜோதிக்கு பதிலாக புதிய துணை ஆணையராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். நாகஜோதி தற்போது ஆவணக் காப்பக எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை நாடுவர் என தெரிகிறது.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications