பிறப்பு சான்றிதழ், பள்ளி சான்றிதழ், ஆதார்.. ஆவணமாக பயன்படுத்துவது குறித்து மத்திய அரசு விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு பள்ளி, கல்லூரிகளில் சேருவதற்கு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, திருமண சான்றிதழ் உள்பட அரசு சார்ந்த அனைத்து சேவைகளையும் பெறுவதற்கு பள்ளி ஆவணங்கள், ஆதார் அடையாள அட்டை மற்றும் பிற அடையாள ஆவணங்களுக்கு மாற்றாக பிறப்பு சான்றிதழ் பயன்பட உள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இன்றைக்கு பிறப்பு சான்றிதழக்கு அடுத்தபடியாக ஆதார் கார்டு தான் மிக முக்கியம். பள்ளியில் சேர்ப்பது தொடங்கி, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு, பான் கார்டு, பாஸ்போர்ட் என எல்லாவற்றுக்கும் ஆதார் கார்டு வேண்டும். ஆனால் என்ன ஒரு சிக்கல் என்றால், ஆதார் கார்டு வாங்குதவற்கு கட்டாயம் பிறப்பு சான்றிதழ் அவசியம்..

Central Govt Notification birth certificate adhar card

அதாவது இந்தியாவில் இந்த மாநிலத்தில், இந்த மாவட்டத்தில், இந்த மருத்துவமனையில் பிறந்தார் என்று அங்குள்ள அரசு அதிகாரி சான்றளிக்க வேண்டும். அந்த பிறப்பு சான்றிதழ் இருந்தால் மட்டுமே ஆதார் கார்டு வாங்க முடியும் என்கிற நிலை உள்ளது. இந்நிலையில் பிறப்பு சான்றிதழையே அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் என்று தகவல்கள் பரவியது.

அதாவது அரசு பள்ளி, கல்லூரிகளில் சேருவதற்கு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, திருமண சான்றிதழ் உள்பட அரசு சார்ந்த அனைத்து சேவைகளையும் பெறுவதற்கு பள்ளி ஆவணங்கள், ஆதார் அடையாள அட்டை மற்றும் பிற அடையாள ஆவணங்களுக்கு மாற்றாக பிறப்பு சான்றிதழ் பயன்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் சிலர் தகவல்களை பரப்பி வருகிறார்கள்.

அவர்கள் பரப்பி உள்ள தகவலின் படி, அரசு சேவைகள், கல்வி, பயணம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றை பெறுதற்காக பிறப்பு சான்றிதழ் கட்டாய ஆவணமாக்கப்பட்டிருக்கிறது. எனவே மூத்த குடிமக்கள் உள்பட பொதுமக்கள் பிறப்பு சான்றிதழுக்கு பதிவு செய்ய, பெயரில் மாற்றங்களை செய்ய 2026-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ந் தேதி கடைசி நாள் என்று மத்திய அரசு அறிவித்ததாகவும் கூறியிருந்தனர்.

மேலும், பள்ளி ஆவணங்கள் இனி வயதை குறிப்பிடும் சான்றாக பயன்படாது. அரசு வழங்கும் பிறப்பு சான்றிதழ் மட்டுமே அதிகாரப்பூர்மாக பயன்படும் என்றும் அரசு அறிவித்துள்ள கடைசி நாளுக்கு பின்னர் பிறப்பு சான்றிதழில் எந்தவித மாற்றமும் செய்யமுடியாது என்று அந்த தகவலில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தகவல் பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது

இந்த விவகாரம் குறித்து மத்திய அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான பத்திரிகை அலுலக தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பிறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பிக்க 2026-ம் ஆண்டு ஏப்ரல் 27-ந் தேதி கடைசி நாள் என்று மத்திய அரசு அறிவித்ததாக பரவும் தகவல் தவறானது. பிறப்பு சான்றிதழ் தொடர்பாக இதுபோன்ற எந்தவித அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+