ராணுவ தளவாடங்களை தயாரிக்க உள்நாட்டு நிறுவனங்களுக்கு ஊக்கம்! தமிழகத்திற்கு அதிக பலன்: டிஆர்டிஓ தலைவர்
சென்னை: ‛‛மத்திய அரசின் திட்டத்தின் மூலம் டிஆர்டிஓ வழியாக தமிழக சிறு தொழில் நிறுவனங்களுக்கு அதிக பலன் கிடைக்கும்'' என டிஆர்டிஓ தலைவர் சதீஷ் ரெட்டி கூறினார்.
இந்தியாவின் ராணுவத்துறையில் பயன்படுத்தப்படும் தளவாடங்கள், உள்பட பல பொருட்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதை குறைத்து இந்தியாவில் உற்பத்தியை துவங்க மத்திய அரசு முடிவு செய்தது. இதுதொடர்பான சிறப்பு அறிவிப்புகளை சமீபத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். அதாவது பாதுகாப்புத்துறையில் (ராணுவம்) தனியார் பங்களிப்புக்கு வாய்ப்பு வழங்கினார்.

டிஆர்டிஓ
இந்நிலையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) செயல்பட்டு வருகிறது. குறிப்பாக ராணுவத்துக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்வதில் பெரும் பங்களிப்பு செய்து வருகிறது. இதன் தலைவரும், பாதுகாப்பு துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு செயலாளருமான சதீஷ் ரெட்டி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

சிறப்பு திட்டம்
"ராணுவத்துறையில் தளவாட பொருட்களின் மேம்பாடு, வடிவமைப்பை தனியார் தொழிற்சாலைகள் வழங்க மத்திய அரசு ஊக்குவிக்கிறது. பாதுகாப்பு துறையில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கான கொள்கைகளை வகுத்து வழங்க இந்திய தொழில்துறையினர் டிஆர்டிஓவுடன் கைகோர்க்க வேண்டிய நேரம் இது. இதற்காக சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

ஆராய்ச்சி மையம்
பாதுகாப்பு துறை சார்பில் தமிழகத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை துவங்க டிஆர்டிஓ திட்டமிட்டுள்ளது. பாதுகாப்பு துறையில் தனியார் தொழில் நிறுவனங்கள் பங்களிப்பு செய்வதற்கான சிறப்பு திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது. இதன்மூலம் தனியார் தொழில் நிறுவனங்கள் பலன் அடையும். இந்த நிறுவனங்கள் ஒவ்வொரு படிநிலையிலும் டிஆர்டிஓவுடன் சேர்ந்து செயல்பட முடியும். மேலும் ராணுவ தளவாட பொருள், உபகரணங்கள் வடிவமைப்பு, சோதனை, உற்பத்தி, மேம்பாடு மேற்கொள்ளலாம். அத்துடன் சந்தைப்படுத்தல் மற்றும் ஏற்றுமதியும் எளிதாக செய்யலாம்.

சிறு நிறுவனங்களுக்கு பலன்
கோவை, ஓசூர், திருச்சியில் உள்ள பல நிறுவனங்கள் ஏற்கனவே டிஆர்டிஓவுடன் இணைந்து செயல்படுகின்றன. முன்மொழியப்பட் இந்த பாதுகாப்பு வழித்தடமானது தொழில்துறையில் பாதுகாப்பு துறை தொடர்பான திட்டங்களை அதிகம் மேற்கொள்ள ஊக்குவிக்கப்படும். தமிழகத்தில் விண்வெளி துறை சார்ந்த உற்பத்தி நிறுவனங்கள் 120க்கும் அதிகமாக உள்ளன. இந்த நிறுவனங்களில் 700 சப்ளையர்கள் உள்ளனர். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்பு மூலம் இந்த நிறுவனங்கள் ராணுவ துறைக்கான முக்கிய தயாரிப்பு பணிகளை பெறும். மேலும் தமிழகத்தின் சிறிய மற்றும் பெரிய பல நிறுவனங்கள் தொழில் சார்ந்து பலனடையும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications