Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மத்திய அரசு ஊழியர்களுக்கு யோகம்தான்.. ஹோலிக்கு முன்பே அகவிலைப்படி உயர சான்ஸ்.. எவ்வளவு கூடும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹோலி பண்டிகைக்கு முன்பாக அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டும் ஹோலி பண்டிகைக்கு முன்பாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. கடந்த இரண்டு முறை உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வுப்படி பார்த்தால் இந்த முறையும் 3 சதவீதத்திற்கு மேல் இருக்கும் என மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹோலி பண்டிகைக்கு முன்பே அகவிலைப்படி உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அகவிலைப்படி உயர்வு மூலம் 1.2 கோடி அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். அகவிலைப்படி உயர்வை பொறுத்தவரை ஆண்டுக்கு இருமுறை உயர்த்தப்படும். பணவீக்கத்தின் அடிப்படையில் அகவிலைப்படி உயர்வு இருக்கும். ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான அகவிலைப்படி இன்னும் உயர்த்தப்படவில்லை.

dearness allowance central government Holi

அகவிலைப்படி உயர்வு எப்போது?

ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி மார்ச் மாதத்தில் முன் தேதியிட்டு வழங்கப்படுகிறது. ஜூலை மாதம் உயர்த்தப்படும் அகவிலைப்படி அக்டோபர் அல்லது நவம்பரில் உயர்த்தப்படும். அதாவது தீபாவளி பண்டிகைக்கு முன்பாக இரண்டாவது அகவிலைப்படி உயர்வு உயர்த்தப்படும். எனவே ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்து கடந்த 5 ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்ப்படவில்லை.

ஹோலி பண்டிகைக்கு முன்பு

எனினும் ஹோலி பண்டிகைக்கு முன்பாக அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதத்தில் அகவிலைப்படி உயர்வு 50 ல் இருந்து 53 சதவீதமாக உயர்த்தப்பட்டது. மார்ச் 7, 2024-ல் 46 சதவீத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. ஹோலி பண்டிகைக்கு முன்பாக இந்த அறிவிப்பு வெளியானது. இந்த ஆண்டில் வரும் 14 ஆம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. எனவே ஹோலி பரிசாக அகவிலைப்படி உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த இருமுறை உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வுப்படி பார்த்தால் இந்த முறையும் 3 சதவீதத்திற்கு மேல் அகவிலைப்படி உயர்வு இருக்கும் என்பதே மத்திய அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அகவிலைப்படி என்பது அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பணவீக்கத்தினை கணக்கில் கொண்டு அளிக்கப்படுவதாகவும். அடிப்படை சம்பளத்தில் இருந்து அரசு அறிவிக்கும் சதவீதம் கூடுதலாக பணம் கிடைக்கும்.

8 வது ஊதிய கமிஷன்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பே கமிஷன் அமைக்கப்படுகிறது. தற்போது உள்ள 7-வது ஊதிய கமிஷன் அடுத்த ஆண்டுடன் முடிவடைய உள்ள நிலையில், 8-வது ஊதிய கமிஷன் அமைக்க மத்திய கேபினட் ஒப்புதல் அளித்துள்ளது. ஊதிய கமிஷன் குழு பல்வேறு தரப்புடன் ஆலோசித்து எத்தனை சதவீதம் சம்பள உயர்வு அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை அளிக்கும்.

இதன்படிப்படையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்படுவது வழக்கம். 8-வது பே கமிஷன் மூலமாக உள்துறை உள்ளிட்ட 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியர்களும் என மொத்தம் ஒரு கோடியே 15 லட்சம் பேர் பயன்பெறுவார்கள். 8வது ஊதியக்குழுவின் சம்பள உயர்வின் சரியான சதவீதம் வெளியிடப்படவில்லை.

எனினும், சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் பிட்மென்ட் காரணியின் மதிப்பு வெளியாகி உள்ளது. இந்த பிட்மென்ட் காரணி 2.57ல் இருந்து 2.86 ஆக உயரக்கூடும் எனக்கூறப்படுகிறது. இந்த அளவு உயர்த்தப்பட்டால், இது நடந்தால், அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை சம்பளம், 18,000 ரூபாயில் இருந்து, 51,480 ரூபாயாக உயரும். எனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து குட்நியூஸ்கள் காத்திருக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+