சி.ஏ.ஏ.வுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற கோரி மத்திய அரசு மனு
சென்னை: குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக (சி.ஏ.ஏ.) தொடரப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி மத்திய அரசு இன்று மனுத் தாக்கல் செய்துள்ளது.
சி.ஏ.ஏ.வுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களின் உயர்நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றத்திலும் 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன.

கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நேற்று சி.ஏ.ஏ.வுக்கு எதிரான வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது, இவ்விவகாரத்தில், உயர்நீதிமன்றங்களில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டது.
இதேபோல் டெல்லி உயர்நீதிமன்றம், அலகாபாத் உயர்நீதிமன்றங்களிலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனையடுத்து இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டேவிடம் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
அதில், பல்வேறு உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சி.ஏ.ஏ.வுக்கு எதிரான வழக்குகளை உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. இம்மனுவை வரும் வெள்ளிக்கிழமையன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தலைமை நீதிபதி போப்டே தெரிவித்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications