2024 லோக்சபா தேர்தலுடன் அத்தனை மாநில சட்டசபை தேர்தல்களையும் நடத்தப் போகிறதா மத்திய பாஜக அரசு?
சென்னை: மத்தியில் ஆளும் பாஜக, அடுத்தடுத்த சட்டசபை தேர்தல்களில் அமோக வெற்றியை அறுவடை செய்ய இயலாது என கருதுகிறதாம். இதனால் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கோஷத்தின் கீழ் 2014 சட்டசபை தேர்தலுடன் மாநிலங்களின் சட்டசபை தேர்தலை நடத்தலாம் என திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறதாம்.
அண்மையில்தான் தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் முடிவடைந்திருக்கின்றன. இதில் தமிழகம், மேற்கு வங்கம், கேரளா மாநிலங்களில் பாஜகவால் நினைத்த எதனையும் சாதிக்க முடியவில்லை. அதுவும் கேரளாவில் ஒரு இடத்தில் கூட பாஜக ஜெயிக்கவில்லை.

தமிழத்தில் 4 எம்.எல்.ஏக்கள்
தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்குப் பின் 4 எம்.எல்.ஏக்களைப் பெற்றுள்ளது பாஜக. மேற்கு வங்கத்தில் எப்படியும் பாஜக ஆட்சியை அமைக்கும் என வட இந்திய ஊடகங்களை முன்வைத்து கட்டமைக்கப்பட்ட மாய தோற்றத்தை வங்கத்துப் புலி மமதா பானர்ஜி சிதறடித்துவிட்டார். அஸ்ஸாமைப் பொறுத்தவரையில் எதிர்க்கட்சி வாக்குகளைப் பிரிக்கும் குறுக்கு வழியில்தான் பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

புதுவை ஆட்சியில் பாஜக
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் தலைமயிலான கூட்டணியில் இடம்பெற்று 5 இடங்களை பெற்றது பாஜக. ஆட்சி அதிகாரத்துக்கு மிக நெருக்கத்தில் வந்துவிட்ட கோதாவில் அதிகாரத்தை முழுமையாக அபகரிப்பதற்கான அத்தனை சித்துவேலைகளையும் இப்போதே பாஜக தொடங்கிவிட்டது. இதனால் புதுச்சேரியில் அரசியல் குழப்பத்தை தொடக்கி வைத்துள்ளது பாஜக.

எதிர்வரும் சட்டசபை தேர்தல்கள்
அடுத்த ஆண்டு கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், ஹிமாச்சல பிரதேசம், குஜராத் மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. பஞ்சாப் தவிர இதர மாநிலங்களில் பாஜக கை ஓங்கி இருந்தாலும் கொரோனா கோரத்தாண்டவத்துக்கு மிக மோசமான நிர்வாகத்தால் பல்லாயிரக்கணக்கான மக்களை இந்த மாநிலங்களில் பாஜக அரசுகள் பலி கொடுத்திருக்கிறது. இந்த அதிருப்தி நிச்சயம் தேர்தலில் எதிரொலிக்கவே வாய்ப்பிருக்கிறது. இப்படி அடுத்தடுத்த ஆண்டுகளில் நடைபெறும் சட்டசபை தேர்தல்கள் பெரும்பாலும் பாஜகவுக்கு நம்பிக்கை தரக் கூடியதாக அல்லாமல் பெரும் பின்னடைவையே தரக் கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன.

2024 லோக்சபா தேர்தல்
இப்படியே நிலைமை நீடித்தால் 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக மிக மோசமான நிலைமையை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். இதனால்தான் ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற கடைசி ஆயுதத்தை பாஜக கையில் எடுக்க வாய்ப்புள்ளது. இதுபற்றி 2014-ம் ஆண்டு முதலே பாஜக தலைவர்கள் பேசி வருகின்றனர். ஆனால் அதற்கான சந்தர்ப்பமாக 2024-ம் ஆண்டை தேர்வு செய்திருக்கிறதாம் டெல்லி.

அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல்?
2024-ல் லோக்சபா தேர்தல் நடைபெறும் போது மத்திய அரசு விவகாரங்கள்தான் பிரதானமாக இருக்கும். அதுவே மாநிலங்களிலும் எதிரொலிக்கும். மத்தியில் வலிமையான எதிர்க்கட்சிகள் எதுவும் இல்லாத சூழ்நிலையில் தங்களுக்கு சாதகம் என கணக்குப் போடுகிறதாம் பாஜக. அதனால் என்ன ஆனாலும் சரி, 2024 லோக்சபா தேர்தலின் போதே அனைத்து மாநிலங்களுக்கும் தேர்தலை நடத்துவோம் என திட்டம் போட்டு வருகிறதாம் பாஜக.
-
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications