போலி ஆதார் கார்டுகள்.. சொத்து விற்பனையில் முளைத்த சிக்கல்.. பத்திரப்பதிவில் இந்த விஷயத்தை கவனியுங்க
சென்னை: பத்திரப்பதிவு துறையில் அடுத்த சிக்கல் கிளம்பி உள்ளது.. இதுகுறித்த முக்கிய கோரிக்கை ஒன்று அரசுக்கு பறந்துள்ளது.. என்ன அது? நிலத்தை வாங்கி விற்பதற்கு பத்திரங்கள் என்பது மிகமிக அவசியமானது.. அதனால்தான், போலி பத்திரங்களை தயார் செய்து, நிஜ பத்திரங்களை போலவே உருவாக்கி மோசடிகள் அதிகரித்து வருகிறது.
ஆள் மாறாட்டம், போலியான ஆவணங்கள் மூலம் போலி பத்திரப்பதிவுகள் நடைபெறும் பட்சத்தில் அவை கண்டறியப்பட்டால், சார்பதிவாளரோ, பத்திரப் பதிவுத்துறை ஐஜியோ அதனை ரத்து செய்யக் கோரி, கோர்ட்டின் உதவியை சம்பந்தப்பட்டவர்கள் நாடலாம்.. அந்தவகையில், போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு மட்டுமே இதுநாள் வரை இருந்து வந்தது.

தமிழக அரசு: ஆனால், அந்த நிலையை மாற்றி, இனி பத்திரப்பதிவுத்தலைவரே, போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் வகையில் அதிகாரம் வழங்கும் பத்திரப்பதிவு திருத்தச் சட்ட மசோதாவை, தமிழக சட்டசபையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. எனினும், போலி பத்திரத்தின் மூலம் ஏமாறுவதை தடுக்க அரசின் சார்பிலும் நடவடிக்கை எடுத்த பிறகும்கூட, இந்த மோசடிகள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது..
பேரதிர்ச்சி: அதுவும் தற்போது, போலி ஆதார் எண்ணை பயன்படுத்தி சொத்துக்கள் அபகரிப்பது அதிகரித்துள்ளதால், சார் - பதிவாளர்களே அதிர்ச்சி அடைந்துள்ளார்களாம். தமிழகத்தை பொறுத்தவரை மொத்தம் 575 சார் - பதிவாளர் அலுவலகங்கள் வாயிலாக வீடு, மனை சொத்துக்கள் விற்பனை உள்ளிட்ட பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.. சமீபகாலமாகவே, ஆதார் உள்ளிட்ட அடையாள ஆவணங்களில், போலிகள் வரத் துவங்கியிருக்கிறதாம்.
குறிப்பாக, ஆள்மாறாட்டம் செய்ய போலியான ஆதார் எண் பயன்படுத்தப்படுவதாக புகார்கள் கிளம்பி உள்ளன.. அதனால்தான், பத்திரப்பதிவின் போது, சொத்து வாங்குபவர், விற்பவர் குறித்த அடையாளத்தை சரி பார்க்க வேண்டியது அவசியமாகிறது..
அடையாள சான்றிதழ்: அதுமட்டுமல்ல, பொதுமக்கள் எடுத்து வரும் அடையாள சான்றுகளின் உண்மை தன்மையை சரிபார்ப்பதற்கான வசதி இல்லை. அடையாள சான்றிதழில் உள்ளவர்தான், நேரில் வந்துள்ள நபரா? என்பதை ஓரளவுக்கு மட்டுமே பார்க்க முடியும்.. ஆதார் உள்ளிட்ட அடையாள சான்றுகளில் போலிகள் அதிகரித்துள்ளது பெரிய சிக்கலை ஏற்படுத்துவதாகவும், இந்த விஷயத்தில் பதிவுத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications