ராகுல் காந்தியும் ஸ்டாலினும் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்வார்களா? ஆர்.எஸ்.பாரதி விளக்கம்
சென்னை: ராகுல் காந்தியும், ஸ்டாலினும் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்வார்களா என்ற கேள்விக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விளக்கம் அளித்துள்ளார். ராகுல் காந்தி 2 நாட்கள் மட்டுமே பிரச்சாரத்திற்கு வருவதால், ஸ்டாலினின் பிரச்சாரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இதுவரை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாட்டிற்கு வரவில்லை. நாளை மற்றும் ஏப்ரல் 20 ஆகிய இரு நாட்களில் தமிழ்நாட்டில் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து ஒரே மேடையில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அதிமுகவினர் ரூ.10 ஆயிரம் செக் போன்று நோட்டீஸ் கொடுத்து பிரச்சாரம் செய்கின்றனர். இதுதொடர்பாக புகார் அளித்துள்ளோம். அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.
ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பாஜக ஆதரவாளர்கள் பெயருக்கும் பணம் அனுப்பி வருகிறார். நேற்று மட்டும் ரூ.70 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனால் ஸ்ரீதர் வேம்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படி அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, ராகுல் காந்தியும், ஸ்டாலினும் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்ய வாய்ப்பு இல்லை. தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக ஏற்கனவே ஏராளமான திட்டங்கள் போடப்பட்டுவிட்டது. ஏப்ரல் 20 முதல் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் பிரச்சாரம் செய்ய வேண்டியுள்ளது. இன்னும் 30 முதல் 40 தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய வேண்டி இருக்கிறது.
ராகுல் காந்தி - ஸ்டாலின் இடையில் மோதல் என்று அண்ணாமலை பேசியது பொய்யாகிவிட்டது. நாளை ராகுல் காந்தி தமிழ்நாட்டில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அவர் திமுகவுக்கும் சேர்த்தே பிரச்சாரம் செய்ய உள்ளார். நாங்களும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கும் சேர்த்துதான் பணியாற்றி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலின் போது ராகுல் காந்தி தமிழ்நாடு வந்த போது, முதல்வர் ஸ்டாலினுக்கு ஸ்வீட் வாங்கி வந்தது பேசுபொருளாகியது. ஆனால் இம்முறை புதுச்சேரி தேர்தல் பிரச்சாரத்தின் போதும் முதல்வர் ஸ்டாலினை ராகுல் காந்தி சந்திக்கவில்லை. தமிழ்நாடு தேர்தல் பிரச்சாரத்தின் போதும் ராகுல் காந்தி - ஸ்டாலின் சந்திப்பு நடக்காமல் இருப்பது விவாதமாகி இருக்கிறது.
-
இது வெள்ளை அறிக்கை அல்ல.. வெற்று அறிக்கை.. அமைச்சர் மரிய வில்சனை விளாசிய தங்கம் தென்னரசு! -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக












Click it and Unblock the Notifications