10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. அடுத்த 3 மணி நேரத்தில் வெளுத்து வாங்கபோகும் மழை.. வானிலை மையம்!
சென்னை: தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த 5 நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
மாலை நேரத்தில் தொடங்கும் மழை இரவு முழுவதும் தொடர்ந்து பெய்து வருவதால், சாலைகளில் மழைநீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பணிக்கு செல்லும் ஊழியர்கள், பயணம் மேற்கொள்வோர் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

அடுத்த 5 நாட்கள்
இந்த நிலையில் தெற்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வாங்க கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சியின் காரணமாக அடுத்து வரக்கூடிய 5 நாட்களுக்கு தமிழகத்தில் அநேக மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று காலை வானிலை அறிவித்துள்ளது.

மிக கனமழைக்கு வாய்ப்பு
குறிப்பாக வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த ஒரு சில தினங்களாக தமிழகம் முழுவதும் பருவமழை பெய்து வரும் நிலையில் இன்று முதல் நவம்பர் 9-ம் தேதி வரை அடுத்து வரக்கூடிய 5 தினங்களுக்கு தமிழகத்தின் அநேக மாவட்டங்களில் டெல்டா மற்றும் தென்தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை மையம்
இந்நிலையில் இலங்கையை ஒட்டி உள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அல்லது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ வலுப்பெற்று தமிழக கடற்கரை பகுதியை நோக்கி நகர்ந்து வடதமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை முதல் மிககனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
சென்னை உள்பட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. விழுப்புரம், பெரம்பலூர், சேலம், திருச்சி, நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூரில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications