தமிழகத்தில் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்த மழை - 21 முதல் 13 மாவட்டங்களில் அடி வெளுக்குமாம்

தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வரும் 21ஆம் தேதி முதல் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, வட கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. 21ஆம் தேதி முதல் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்குப் பருவமழை காலமாகும். ஜூன் மாதத்தில் தொடங்கிய மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் தென்மேற்குப் பருவமழை தினசரியும் பெய்து வருகிறது.

Chance of heavy rain in 21 to 13 districts in Tamil Nadu says met office

உள் மாவட்டங்களில் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்தாலும் மாலை நேரங்களில் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. நேற்றைய தினம் தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் வால்பாறையில் 9 செமீ மழை பதிவாகியுள்ளது. சின்னக்கல்லார், சோலையார், நீலகிரி மாவட்டம் சின்கோனா,அவலாஞ்சி, நடுவட்டம், மேல்பவானி, தேவாலாவில் கனமழை பெய்துள்ளது. தஞ்சாவூர், திருவாடானை, தருமபுரியிலும் பலத்த மழை பெய்துள்ளது.

இதனிடையே இன்றும் நாளையும் தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வெப்பச்சலனம் காரணமாக மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் அறிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், நீலகிரி, கோவை, வடகடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், தென்மாவட்டங்களிலும் புதுச்சேரி காரைக்காலிலும் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

22ஆம் தேதி திருச்சி, மதுரை, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி, வேலூர், திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஏனைய உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 23ஆம் தேதி தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

தென்மேற்கு மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் வரும் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+