கண்ணே தெரியல.. கொட்டுகிறது பனி.. இங்கெல்லாம் இன்று மழை பெய்ய போகிறது.. வந்தது அறிக்கை
கடலோர மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது
சென்னை: வடகிழக்கு பருவக் காற்று காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் அடுத்து 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது... இதனால், வழக்கமாக பெய்ய வேண்டிய 17 செ.மீ. என்ற இயல்பான அளவை விட 29 சதவீதம் அதிகரித்து, 22 செ.மீ. என்ற அளவில் மழை பதிவானது.
ஆனால், நவம்பரில் பருவமழை கொட்டி தீர்த்துவிட்டது.. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதி மற்றும் மிக கன மழை கொட்டியது... இதனால், அந்த மாதத்தில் பெய்ய வேண்டிய 17 செ.மீ. மழை என்ற அளவை விட 137 சதவீதம் அதிகமாக 42 செ.மீ. மழை பதிவாகியது. இதன் காரணமாக பெரும்பாலான ஆறுகள், ஏரிகள், அணைகள், குளங்கள் நிரம்பின. எனவே, இந்த மாதத்திலும் மழை இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், மழை குறைவாகவே இருந்து வருகிறது... ஆனால், பெரும்பாலான மாவட்டங்களில் பனியின் தாக்கம் அதிகரித்து விட்டது.. எங்கு பார்த்தாலும் பனிமூட்டம் காணப்படுகிறது..

புதுச்சேரி
இதனால், மழைப்பொழிவு வெகுவாக குறைந்து வருகிறது.. சில மாவட்டங்களில் பனிமூட்டம் காரணமாக, வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்ட சிரமப்படுகின்றனர்.. அதேநேரம் வடகிழக்கு பருவகாற்றின் காரணமாக இன்றும், நாளையும் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

சென்னை
வரும் 15, மற்றும் 16-ந் தேதியும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சென்னையை பொறுத்தவரையில் இன்று வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிதமான மழை
கடந்த 2 நாட்களுக்கு முன்பு வானிலை மையம் வெளியிட்டிருந்த அறிக்கையில், டிசம்பர் 13ம் தேதி தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவித்திருந்தது..

மழைக்கு வாய்ப்பு
நாளைய தினம் அதாவது டிசம்பர் 14ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், டிசம்பர் 15ம் தேதி தென் மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், அதே சமயம் ஏனைய மாவட்டங்களில் பொதுவாக வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யவும் வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications