சென்னை, திருவள்ளூர் உள்பட 10 மாவட்டம்.. அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெப்பம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வாட்டி வதைத்துக் கொண்டு இருந்த நிலையில், நேற்று சென்னையில் வானிலை தடாலடியாக மாறியது. நேற்றைய தினம் காலை முதலே லேசான சாரல் மழை பெய்ததால் சென்னை வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. சென்னையில் வெப்பம் தணிந்து மேக மூட்டமாகவும் விட்டு விட்டு மழை பெய்து இதமான சூழல் நிலவியது.

நேற்று இரவு கனமழை பெய்யதொடங்கியது. விடிய விடிய பெய்த மழை இன்று பகல் வேளைகளிலும் விட்டு விட்டு பெய்தது. இதனால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. காற்று மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் விடாமல் கனமழை பெய்தது. சென்னை மட்டும் இன்றி வெளி மாவட்டங்களிலும் மழை பெய்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications