தமிழகத்தில் இடியுடன் மழை பெய்யும்.. அனல் காற்றும் வீசும்.. வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் கடந்த சில நாட்களாக கொளுத்தி வருகிறது. திருத்தணியில் இன்று அதிகபட்சமாக 110 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது. கடந்த சில நாட்களாகவே அங்கு 109, 110 என்ற அளவில் வெயில் காணப்படுகிறது.

சென்னையில் 100 டிகிரி பாரன்ஹீட், திருச்சியில் 104 டிகிரி பாரன்ஹீட், மதுரையில் 102 டிகிரி பாரன்ஹீட், சேலத்தில் 101 டிகிரி பாரன்ஹீட், நெல்லையில் 104 டிகிரி பாரன்ஹீட், கோவையில் 96 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலை பதிவாகி உள்ளது. அதேநேரம் மலைப்பிரதேசங்களான ஊட்டியில் குறைந்த பட்சமாக 70 டிகிரி பாரன்ஹீட்டும், கொடைக்கானலில் 73 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும் பாதிவாகி காணப்படுகிறது.
உள் தமிழக மாவட்டங்களை பொறுத்தவரை அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 8 சென்டிமீட்டரும், வேலூரில் 5 சென்டிமீட்டரும், கிருஷ்ணகிரி மாவட்டம் பேனுகொண்டபுரத்தில் 3 சென்டிமீட்டரும் மழை பெய்துள்ளது.
சென்னையில் வெப்பநிலை அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியசும் பதிவாகும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
4 நாளைக்கு மழை தான்.. இன்னைக்கும் 14 மாவட்டங்களில் மழை பிச்சுக்கப் போகுது! ஐஎம்டி கொடுத்த அப்டேட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில்












Click it and Unblock the Notifications