தமிழகத்தின் ரிமோட் கண்ட்ரோல் டெல்லியில் இருக்கிறது- சந்திரபாபு நாயுடு கடும் தாக்கு
சென்னை: தமிழகத்தின் ரிமோட் கண்ட்ரோல் டெல்லியில் இருக்கிறது என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடுமையாக விமர்சனம் செய்தார்.
கருணாநிதி, அண்ணா சிலை அண்ணா அறிவாலயத்தில் சோனியாகாந்தியால் திறக்கப்பட்டது. இதையடுத்து சோனியா, ராகுல் ஆகியோர் மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதையடுத்து ஒய்எம்சிஏ மைதானத்தில் பொதுக் கூட்டம் தொடங்கியது. இந்த விழாவில் ஆந்திர மாநில முதல்வர் தமிழிலும் ஆங்கிலத்திலும் பேசினார். அப்போது அவர் பேசுகையில் அனைவருக்கும் வணக்கம். தென் பாரதமே பெருமை கொள்ளும் நேரமிது.

மூத்த தலைவர்
கருணாநிதியின் அரசியல் அனுபவம் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர். 80 ஆண்டுகளாக தமிழகத்தின் மக்களுக்கா பாடுபட்டவர் தலைவர் கருணாநிதி. 50 ஆண்டுகளாக திமுக தலைவராக இருந்தவரக் கருணாநிதி. இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர் கருணாநிதி.

நினைவுக் கொள்வர்
ஒரு தேர்தலிலும் கருணாநிதி தோற்றதில்லை. என்னை மிகவும் கவர்ந்தது. கருணாநிதியின் சாதனையை எதிர்கால சந்ததியினரும் நினைவுக் கொள்வர். நாட்டின் கூட்டாட்சி முறை மத்திய அரசால் முற்றிலும் சீர்குலைக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணிக்கு வாக்களித்ததால் நாம் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளோம். சிபிஐ, அமலாக்கத்துறை, ஆர்பிஐ ஆகியவற்றில் ஊழல் நடந்துள்ளது.

சீரழிவு
இரவோடு இரவாக சிபிஐ இயக்குநர் மாற்றப்பட்டு விட்டார். ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேலுக்கு நெருக்கடி கொடுத்து அவரை ராஜினாமா செய்ய வைத்துள்ளனர். நாட்டின் அனைத்து அரசு அமைப்புகளையும் மத்திய அரசு சீரழித்து வருகிறது.

சரிவு
வலிமையான மாநிலங்களே வலிமையான நாட்டை உருவாக்கும். தமிழக அரசை ரிமோட் கன்ட்ரோல் மூலம் டெல்லியிலிருந்து இயக்கி வருகிறது. பணமதிப்பிழப்பு மக்களுக்கு பலன் தரவில்லை. மோசமான நிர்வாகத்தால் விவசாயம் பெரும் சரிவை சந்தித்து வருகிறது.

முறைகேடுகள்
ரிசர்வ் வங்கி நிர்வாகத்தை மத்திய அரசு சீரழித்துவிட்டது. விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்டோர் வங்கியில் பெற்ற கடனை திருப்பி செலுத்தாததன் மூல்ம வங்கித் துறையிலும் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன.

ஆன்மா சாந்தியடையும்
ரஃபேல் விவகாரத்தில் மத்திய அரசு உச்சநீதிமன்ரத்தில் தவறான தகவலை தந்து சாதகமான தீர்ப்பை பெற்றுள்ளது. ஸ்டாலினை தமிழக மக்கள் ஆதரித்து அவரை முதல்வராக்கினால் மட்டுமே கருணாநிதியின் ஆன்மா சாந்தியடையும் என்றார் சந்திரபாபு நாயுடு.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications