மோடி பிரதமராவதில் சிக்கல்? ரயில்வே, உள்துறை, நிதித் துறையை தூக்கும் நாயுடு? மாட்டிக்கிட்ட பாஜக
சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் சந்திரபாபு நாயுடு முக்கியமான சில துறைகளை பாஜகவிடம் கேட்க உள்ளாராம்.
2024 லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 240 இடங்களில் பாஜக வென்றுள்ளது. பாஜக ஆட்சி அமைக்க என்டிஏவில் உள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், ஆதரவு தேவை. இது போல லோக் ஜனதா கட்சி, ஷிண்டேவின் சிவசேனா கட்சி ஆகியோரின் ஆதரவும் தேவை.

இவர்களின் ஆதரவு எல்லாம் இருந்தால்தான் பாஜக ஆட்சி அமைக்க முடியும். இனிமேல் இவர்கள் சொல்வதுதான் சட்டம் என்ற நிலைமை பாஜகவிற்கு ஏற்பட்டு உள்ளது.
பாஜக மெஜாரிட்டி இல்லை: 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 292 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனியாக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பல இடங்களில் இன்னும் முழுமையான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.
சந்திரபாபு நாயுடு - நிதிஷ் கிங்: இந்த லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் சந்திரபாபு நாயுடு - நிதிஷ் குமார் ஆகியோரின் ஆதரவுடன் மட்டுமே பாஜக ஆட்சி அமைக்க முடியும்.
பாஜக ஆட்சி அமைக்க பீகாரில் உள்ள நிதிஷ் குமார் ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு தர வேண்டும். அவர்களிடம் 12 எம்பிக்கள் உள்ளனர். பாஜக ஆட்சி அமைக்க ஆந்திர பிரதேசத்தில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆதரவு தர வேண்டும். அவர்களிடம் 16 எம்பிக்கள் உள்ளனர். இவர்களின் ஆதரவு இன்றி பாஜக ஆட்சி அமைக்க முடியாது.
என்ன கோரிக்கை: இதுவரை நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பாஜகவிற்கு ஆதரவு தரவில்லை. பாஜக ஆட்சிக்கு ஆதரவு தருகிறோம், மோடி ஆட்சி அமைக்க ஆதரவு தருகிறோம் என்று சொல்லவில்லை. முக்கியமாக நிதிஷ் குமார் இதுவரை மோடிக்கு ஆதரவு தருவேன் என்றும் கூறவில்லை. மோடி ஆட்சி அமைக்க நிதிஷ் தனி ஆதரவு கொடுப்பாரா என்பதே கேள்வியாக உள்ளது.
நாயுடு கோரிக்கை: இப்படிப்பட்ட நிலையில்தான் இன்று டெல்லிக்கு போகும் முன்பே நாயுடு பாஜகவிடம் சில கோரிக்கைகளை வைத்துவிட்டாராம்.
அதில் நிதி துறை அல்லது பாதுகாப்பு துறையை நாயுடு கேட்டுள்ளார். அதோடு துணை பிரதமர் பதவி வேண்டும். மேலும் ரயில்வே அல்லது சாலை போக்குவரத்து துறையில் ஒன்று வேண்டும் என்று கேட்க நாயுடு ஆலோசனை செய்துள்ளாராம்.
இது போக நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பாஜகவிற்கு ஆதரவு தரவில்லை. அவர் பெரும்பாலும் மோடி பிரதமராக வேண்டாம் என்று கூட சொல்ல வாய்ப்பு உள்ளதாம். நிதிஷ் தனக்கு பிரதமர் பதவியை கேட்க நினைப்பார். அப்படி இல்லையென்றால் துணை பிரதமர் + மோடி அல்லாத ஒருவர் பிரதமர் என்ற கோரிக்கையை நிதிஷ் வைப்பார் என்று கூறப்படுகிறது.
என்ன நடந்தாலும் பாஜகவிற்கு இனி வெற்றிகரமான நாட்கள் இல்லை .. அதனால்தான் மோடியும் நேற்று முகம் வாடி இருந்தார். இதை உணர்ந்தே பாஜகவும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் உடைந்து போய் இருக்கிறது.












Click it and Unblock the Notifications