Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலுமணியின் வலதுகரம்.. அதிமுகவில் இருந்து விலகுவதாக சந்திரசேகர் திடீர் அறிவிப்பு.. அவரே சொன்ன காரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் இருந்து விலகுவதாக எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளரும், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளருமான சந்திரசேகர் திடீரென அறிவித்துள்ளர். கட்சியின் அனைத்து வித பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக சந்திரசேகர் அறிவித்து இருக்கிறார்.

தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக உள்ளது. அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அக்கட்சி தற்போதே முடுக்கிவிட்டுள்ளது. திண்ணை பிரசாரம், பூத் கமிட்டி நிர்வாகிகளுடனான ஆலோசனை என அதிமுக தேர்தல் பணிகளை தொடங்கியிருக்க கூடிய சூழலில், அவ்வப்போது கட்சிக்குள் சலசலப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

chandrashekhar-a-key-executive-of-the-aiadmk-announces-his-resignation-from-the-party

அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் - எடப்பாடி பழனிசாமி இடையே பனிப்போர் நிலவுகிறது. செங்கோட்டையன் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மீது பாராமுகம் காட்டி வருவதும் சட்டசபையில் அவருடைய செயல்பாடு சில நேரங்களில் தனியாக இருப்பதும் அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது ஒருபக்கம் என்றால் அனைவரும் ஒன்றிணைந்தால்தான், வெற்றி பெற முடியும் என்று முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் தொடர்ச்சியாக கூறி வருகிறார்கள். இவ்வாறாக அதிமுகவில் உள்கட்சி விவகாரம் தேர்தல் நெருங்கும் நேரத்தில் பரபரப்பை கிளப்பி வரும் நிலையில், இன்று அக்கட்சியின் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணை செயலாளரும் நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளருமான சந்திரசேகர் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

முழுமையாக விடுவித்து கொள்கிறேன்

இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்க கூடிய அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அதிமுகவில் முழு ஈடுபாட்டுடன் அயராது பாடுபட்டு வந்தேன். கடந்த 20 ஆண்டு காலம் அதிமுகவில் முழு அளவில் உண்மையுடன் உழைத்து வந்தேன். கட்சியின் உத்தரவை கடமை தவறாமல் கடைபிடித்து காத்து வந்திருக்கிறேன். அதிமுக கட்சி பணியில் எள்ளளவும் சுணக்கம் வராமல் எதிர்பார்ப்பு இன்றி பணியாற்றி இருக்கிறேன்.

மக்களுக்கான சேவை பணிகளிலும் மக்களோடு மக்களாக நின்று போராடி இருக்கிறேன். கட்சிக்காக நான் செய்த பணிகள் அனைவரும் அறிந்ததே.. தற்போது எனது தனிப்பட்ட பணி காரணமாக தொடர்ந்து கட்சிப் பணியில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள முடியாத சூழல் இருக்கிறது. எனவே கட்சியின் அனைத்து வித பொறுப்புகளில் இருந்தும் என்னை முழுமையாக விடுவித்து கொள்கிறேன்.‌

எஸ்பி வேலுமணியின் வலது கரம்

கட்சியிலிருந்து விலகும் முடிவை பலத்த தயக்கத்துடன் கனத்த இதயத்துடன் எடுத்திருக்கிறேன். கட்சியில் எனக்கு வாய்ப்பு அளித்த அங்கீகாரம் மற்றும் ஆதரவு வழங்கி திறம்பட பணியாற்ற ஊக்கம் தந்த ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் எஸ். பி வேலுமணி ஆகியோருக்கு சிரம் தாழ்ந்த நன்றியை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தனை ஆண்டு காலம் என்னுடன் பணிபுரிந்த கழகத்தின் நிர்வாகிகள், மூத்தவர்கள் மற்றும் கோவையில் எனது தோளோடு தோள் நின்று துடிப்புடன் பணியாற்றிய கட்சியின் தொண்டர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்..

பிரியமனமின்றி பிரிகிறேன். என்னை வாழ வைத்த அதிமுகவின் அன்பிற்கு என்றும் நான் அடையாளமாக இருப்பேன்" இவ்வாறு அவர் கூறியுள்ளார். கோவையை சேர்ந்த ஆர். சந்திரசேகர் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் வலது கரமாக அறியப்படுகிறார். அவருடைய தீவிர ஆதரவாளராக இருக்க கூடிய சந்திரசேகர் திடீரென கட்சியில் இருந்து விலகியது அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+