அடுத்தடுத்து சாதனை.. சந்திரயான் 3 டூ ஆதித்யா எல்1.. காரணமான மசாலா தோசையும், காபியும்.. என்ன நடந்தது?
சென்னை: இஸ்ரோ கடந்த சில தினங்களில் அடுத்தடுத்து சந்திரயான் 3 , ஆதித்யா எல்1 திட்டங்களில் வென்றுள்ளது. இந்த வெற்றிக்கு அறிவியல், கடும் முயற்சி, திட்டமிடல்தான் காரணம். ஆனால் வேறு ஒரு விஷயமும் மனோ ரீதியாக விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தியதாக கூறப்படுகிறது.
சமீபத்தில்தான் இஸ்ரோ வெற்றிகரமாக சந்திரயான் திட்டத்தை நிறைவேற்றியது. சந்திரயான் 3 நிலவில் தீவிரமான ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. இந்த ஆராய்ச்சியில் பல்வேறு சுவாரசியமான தகவல்கள் கிடைத்து வருகின்றன. சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டும் தற்போது நிலவில் உள்ளது. இதில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்தில் இருந்தே ஆய்வு செய்து கொண்டு இருக்கிறது. பிரக்யான் ரோவர் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து நிலவில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

பிரக்யான் ரோவர் நிலவில் மெதுவாக நகர்ந்து சென்று கொண்டு இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் தங்களுடன் கொண்டு சென்ற எல்லா கருவிகளையும் நிலவில் இறக்கி ஆய்வு செய்து வருகிறது,
சூரிய ஆய்வு: இப்படிப்பட்ட நிலையில்தான் சூரியனை ஆய்வு செய்ய இந்தியா ஆதித்யா மிஷனை கையில் எடுத்துள்ளது. இதை விண்ணில் ஏவுவதற்கான 24 மணிநேர கவுன்டவுன் நேற்று காலை 11.50 மணிக்கு தொடங்கியது. 100-127 நாட்கள் பயணித்து L1 சுற்றுவட்டப்பாதையை அடைந்து, சூரிய புயல், ஈர்ப்பு விசை, கதிர்வீச்சை ஆய்வு செய்ய உள்ளது ஆதித்யா L1 . இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு விண்கலன் இது. சூரியனை ஆய்வு செய்ய, இன்று காலை 11:50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா விண்கலத்தில் இருந்து இது புறப்பட்டது. PSLV-XL(C57) ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்த விண்கலம் ஏவப்பட்டு உள்ளது.
அடுத்த 4 மாதங்களில் ஆதித்யா-எல் 1 மிஷன் சூரியனின் எல் 1 வட்டப்பாதையை அடையும். சந்திரயான் 3ன் லேண்டர், ரோவர் நிலவில் இறங்கியது போல ஆதித்யா எல்1 சூரியனில் இறங்காது. சூரியனை இது தொடாது
ஆதித்யா சூரியனில் இருந்து எல் 1 பாயிண்ட் தூரத்தில் இருக்கும். எல் 1 என்பது Sun-Earth Lagrange point ஆகும். அதாவது சூரியனுக்கும் - பூமிக்கும் இடையில் உள்ள பாயிண்ட் ஆகும். பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் இந்த புள்ளி உள்ளது. இரண்டின் பாதிக்கப்படலாம் சூரியனை ஆய்வு செய்யும் பொருட்டு ஆதித்யா எல் 1 அனுப்பப்பட உள்ளது. இரண்டின் ஈர்ப்பு விசை காரணமாக ஆதித்யா எல் 1 எளிதாக இங்கே வட்டப்பாதையில் சுற்ற முடியும்.
கிட்டத்தட்ட சூரியன் பூமிக்கு இடையிலான தூரம் 151 மில்லியன் கிலோ மீட்டர் ஆகும். கிட்டத்தட்ட சூரியனில் இருந்து 149 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் இந்த ஆதித்யா எல் 1 நிலைநிறுத்தப்படும்.
வெற்றிக்கு காரணம்: இஸ்ரோ கடந்த சில தினங்களில் அடுத்தடுத்து சந்திரயான் 3 , ஆதித்யா எல்1 திட்டங்களில் வென்றுள்ளது. இந்த வெற்றிக்கு அறிவியல், கடும் முயற்சி, திட்டமிடல்தான் காரணம். ஆனால் வேறு ஒரு விஷயமும் மனோ ரீதியாக விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தியதாக கூறப்படுகிறது.
அதன்படி சந்திரயான் 2 பாதி தோல்வி அடைந்த பின் இஸ்ரோ விஞ்ஞானிகள் கடந்த 4 வருடமாக கடினமாக உழைத்தனர். தினமும் ஓவர் டைம் பணிகளை செய்தனர்., அதேபோல் பலரும் இதுவும் கூட வீட்டிற்கு செல்லாமல் இஸ்ரோவிலேயே உழைத்தனர்.
இதன் விளைவாகவே அடுத்தடுத்து இரண்டு பெரிய திட்டங்களை வெற்றிபெற வைக்க முடிந்தது. இதற்கு உத்வேகம் அளித்ததுதான் மசாலா தோசை, காபி. தினமும் இஸ்ரோவில் மாலை நேரம் கூடுதல் வேலை பார்க்கும் விஞ்ஞானிகளுக்கு மசாலா தோசை, காபி உள்ளிட்டவை இலவசமாக உணவு கொடுக்கப்பட்டதாக விஞ்ஞானி ஒருவர் தி வாஷிங்க்டன் போஸ்ட் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
இதுதான் நேரடி காரணம் இல்லை என்றாலும்.. மறைமுகமாக ஒருவகையில் இஸ்ரோ ஊழியர்கள் ஓவர் டைம் பார்க்க முக்கிய காரணமாக இது இருந்தது. அதாவது இஸ்ரோ எங்களை மிக சிறப்பாக கவனித்துக்கொண்டது. ஓவர் டைம் பார்க்கும் அலைச்சல் இல்லாமல் நன்றாக நடத்தியது என்று விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications