நிலவில் ஏற்பட்ட திடீர் நிலஅதிர்வு.. லேண்டர் அனுப்பிய ஷாக் தகவல்.. என்ன நடந்தது? இஸ்ரோ பரபர விளக்கம்
சென்னை: நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் உள்ளிட்டவை வெற்றிகரமாக ஆய்வு செய்து வருகின்றன. இத்தகைய சூழலில் தான் நிலவில் திடீரென நிலஅதிர்வு ஏற்பட்டது தொடர்பான பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் 3 விண்கலம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. கடந்த 23ம் தேதி விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. அதன்பிறகு 4 மணிநேரத்தில் பிரக்யான் ரோவர் விக்ரம் லேண்டரில் இருந்து நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியது.

தற்போது தென்துருவத்தில் விக்ரம் லேண்டர், ரோவர் ஆகியவை பல்வேறு ஆய்வுகளை செய்து வருகின்றன. ரோவர் நிலவின் மேற்பரப்பில் நகர்ந்து சென்று அங்குள்ள கனிமவளங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறது. ஆக்சிஜன், சல்பர் உள்பட 8 வகையான தனிமங்களை ரோவர் கண்டறிந்துள்ளது.
மேலும் அதுகுறித்த முக்கிய தகவல்களை விக்ரம் லேண்டர் வாயிலாக இஸ்ரோவுக்கு அனுப்பியது. அதேபால் விக்ரம் லேண்டரில் உள்ள ஆய்வு கருவிகளும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன. விக்ரம் லேண்டர் மேற்கொண்ட ஆய்வில் பிளாஸ்மா அளவு என்பது கணிக்கப்பட்டதை விட குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. இது விண்வெளி ஆய்வு கலன்களுக்கு சாதகமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தான் தற்போது ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நிலவில் விக்ரம் லேண்டர், ரோவர் ஆய்வு செய்யும்போதே திடீரென நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த விபரத்தை விக்ரம் லேண்டர் பதிவு செய்துள்ளதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
‛‛சந்திரயான் - 3 விக்ரம் லேண்டரில் நிலவின் நிலஅதிர்வுகளை ஆய்வு செய்யும் வகையில் ஐஎல்எஸ்ஏ எனும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இது மைக்ரோ எலக்ட்ரோ மெக்கானிக்கல் சிஸ்டம்ஸ் தொழில்நுட்பத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்த ஐஎல்எஸ் ஏ கருவி தான் ரோவர் மற்றும் பிற ஆய்வு கருவிகளின் செயல்பாட்டால் ஏற்படும் அதிர்வுகளை பதிவு செய்து வருகிறது.
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 31, 2023
In-situ Scientific Experiments
Instrument for the Lunar Seismic Activity (ILSA) payload on Chandrayaan 3 Lander
-- the first Micro Electro Mechanical Systems (MEMS) technology-based instrument on the moon --
has recorded the movements of Rover and other… pic.twitter.com/Sjd5K14hPl
இத்தகைய சூழலில் தான் கடந்த 26ம் தேதி ரோவர் உள்ளிட்ட பிற ஆய்வு கருவிகளால் ஏற்படும் அதிர்வுக்கு அப்பாற்பட்டு புதிதாக இயற்கையாகவே ஒரு நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலஅதிர்வை விக்ரம் லேண்டரில் உள்ள ஐஎல்எஸ்ஏ எனும் கருவி பதிவு செய்துள்ளது. இந்த அதிர்வுக்கான காரணம் என்ன? என்பது ஆய்வு செய்து வருகிறோம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த நிலவின் மேற்பரப்பில் ஏற்பட்ட இந்த நிலஅதிர்வின் பிற விபரங்களை இஸ்ரோ இன்னும் தெரிவிக்கவில்லை. மேலும் தற்போதைய சூழலில் இந்த நிலஅதிர்வால் நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்து வரும் விக்ரம் லேண்டர் மற்றும் ரோவருக்கு எந்த பாதிப்பும் இல்லை. இரு கருவிகளும் தொடர்ந்து தென்துருவத்தில் வெற்றிகரமாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications