சிக்னல் கிடைக்குமா? நிலவில் லேண்டர், ரோவர் கண்விழிக்காவிட்டால்.. அடுத்த என்ன நடக்கும்? இத படிங்க
சென்னை: நிலவில் உறக்க நிலையில் உள்ள சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகியவற்றை மீண்டும் செயல்பாட்டு கொண்டு வர இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர். தற்போது வரை சிக்னல் கிடைக்கவில்லை. இத்தகைய சூழலில் ஒருவேளை விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகியவற்றை செயல்பாட்டுக்கு கொண்டு வரமுடியாவிட்டால் என்ன நடக்கும்? என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
நிலவில் ரஷ்யா, அமெரிக்கா, சீனா விண்கலங்கள் தரையிறங்கி உள்ளன. இதற்கு அடுத்தப்படியாக இந்தியாவின் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்தியாவின் விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது.

இதன்மூலம் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு இந்தியா என்ற மகத்தான சாதனை படைக்கப்பட்டது. அதாவது ஆகஸ்ட் 17 ம் தேதி உந்துவிசை கலனில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 23ம் தேதி மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் ‛சாப்ட் லேண்டிங்' முறையில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
அதன்பிறகு விக்ரம் லேண்டரில் இருந்து திட்டமிட்டப்பட்டி பிரக்யான் ரோவர் நிலவில் தரையிறங்கியது. நிலவின் மேற்பரப்பில் இஸ்ரோ மற்றும் இந்திய தேசியக்கொடி, இஸ்ரோவின் அடையாளத்தை பதித்து ரோவர் ஆய்வு செய்தது. ஆக்சிஜன், சல்பர், அலுமினியம், அயர்ன் உள்பட 8 வகையான தனிமங்கள் இருப்பதை உறுதி செய்யப்ட்டது. அதோடு நிலவின் தென்துருவம் தொடர்பான படங்களை இஸ்ரோவுக்கு அனுப்பியது.
மேலும் திட்டமிட்டப்படி விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகியவை வெற்றிகரமாக தங்களின் பணியை செய்து முடித்தன. இதையடுத்து நிலவில் 14 நாட்கள் இருள் தொடங்கியது. இதையடுத்து லேண்டர், ரோவர் செயல்பாட்டை நிறுத்தி வைத்து மீண்டும் நிலவில் பகல் தொடங்கும்போது செயல்பாட்டு கொண்டு வர இஸ்ரோ முடிவு செய்தது. லேண்டர், ரோவர் ஆகியவற்றின் ஆயுட்காலம் என்பது 14 நாட்கள் தான் என்றாலும் இந்த முயற்சி கைக்கூடினால் அது போனஸாக அமையும் என இஸ்ரோ தெரிவித்தது.
இதையடுத்து கடந்த 2ம் தேதி ரோவரும், கடந்த 4ம் தேதி விக்ரம் லேண்டரும் தூக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இருகருவிகளிடம் இருந்த டேட்டாக்களை முழுமையாக இஸ்ரோ கைப்பற்றிய நிலையில் இரு ஆய்வு கருவிகளும் செயல்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது நிலவில் சூரியஒளி பட்டு மீண்டும் பகல் பொழுது தொடங்கியது.
இதையடுத்து கடந்த 22ம் தேதியில் லேண்டர் மற்றும் ரோவரை மீண்டும் செயல்பட வைக்கும் முயற்சிகள் நடைபெற்றன. ஆனால் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை. தற்போது வரை விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரிடம் இருந்து சிக்னல் பெறுவதற்கான பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். நிச்சயம் இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதித்து காட்டுவார்கள் என்ற நம்பிக்கை அனைவரிடமும் உள்ளது.
இத்தகைய சூழலில் தான் ஒரு கேள்வி எழுந்துள்ளது. அதாவது துரதிர்ஷ்டவசமாக விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரிடம் இருந்து சிக்னலை பெற முடியாவிட்டால் இஸ்ரோ என்ன செய்யும்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. அதாவது விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகியவற்றிடம் இருந்து சிக்னல் பெற முடியாவிட்டால் அது நிலவுக்கான இந்திய தூதராக மாற்றப்படும் என கூறப்படுகிறத. அதாவது நிலவில் இந்தியா கால்பதித்து விட்டதன் அடையாளமாக விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் அங்கேயே இருக்கும் என இஸ்ரோ தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications