லேண்ட் ஆன விக்ரம்! அடுத்த 4 மணி நேரம் என்ன நடக்கும்? வயிற்றிலிருந்து வெளியே வரும் பிரக்யான்!
சென்னை: நிலவில் சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் தரையிறங்கி சாதனை படைத்து உள்ளது. இதை பற்றி பலரும் பேசி வரும் நிலையில்.. அது தரையிறங்கிய பின் என்ன நடக்கும் என்று இங்கே விளக்கி இருக்கிறோம்.
சந்திரயான் 3 திட்டம் முழு வெற்றிபெற்றுள்ளது. சந்திரயான் 3 திட்டத்தில் சந்திரயான் 2ல் இருந்தது போல ஆர்பிட்டர் இருக்காது. மாறாக விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் இரண்டு மட்டுமே உள்ளது. இதில் ப்ரோபல்ஷன் மாடல் என்ற ஒரு உந்த கூடிய ப்ரோபல்ஷன் என்ற பகுதியும் உள்ளது. இதுதான் இந்த லேண்டர், ரோவரை நிலவிற்கு கொண்டு சென்றது. சந்திரயான் 3ல் இருந் விக்ரம் லேண்டர் தற்போது நிலவில் வெற்றிகரமாக இறங்கி உள்ளது. விக்ரம் லேண்டரால் ஏற்பட்ட புழுதி அடங்கிய பின் அதில் இருந்து ரோவர் வெளியே களமிறக்கப்படும்.

இந்த சந்திராயன் 3ல் பின்வரும் 2 முக்கியமான பாகங்கள் உள்ளன. ப்ரோபல்ஷன் மாடுல்: இது சந்திராயன் ராக்கெட்டின் தலை பகுதியில் இருக்கும் மொத்த அமைப்பில் கீழ் உள்ள பகுதி ஆகும். சந்திராயன் 3 பூமி வட்டப்பாதையில் நிறுத்தப்பட்ட பின் அதை நிலவை நோக்கி கொண்டு செல்ல அவ்வப்போது பாதை மாற்ற பயன்படுத்தப்பட்ட சிறிய எஞ்சின்தான் இந்த ப்ரோபல்ஷன் மாடுல். பூமியின் வட்டப்பாதையில் இருந்து நிலவில் இருந்து 100 கிமீ தூரம் உள்ள வட்டப்பாதை வரை சந்திராயன் 3வை கொண்டு சென்றது இந்த ப்ரோபல்ஷன் மாடுல்தான். இது ஒரு பாக்ஸ் போல கீழே ராக்கெட் போன்ற திரஸ்டர்கள் கொண்ட அமைப்பு ஆகும். இதில் திரஸ்டர்களுக்கு சார்ஜ் கொடுப்பதற்காக சோலார் பேனல் இருக்கும். இதில்தான் லேண்டர் பொருத்தப்பட்டு இருக்கும். அதன் உள்ளே ரோவர் இருக்கும். இதில் லேண்டர், ரோவர் தவிர்த்து ஷேப் - Spectro-polarimetry of Habitable Planet Earth (SHAPE) எனப்படும் அமைப்பும் உள்ளது. இது பூமியின் அளவை குறித்த ஆய்வை நிலவின் வட்டப்பாதையில் இருந்து மேற்கொள்ளும்.
சந்திராயன் 3 லேண்டர்: சந்திரயான்-3 விண்கலத்தில் விக்ரம் (சமஸ்கிருதத்தில் "வீரம்") என்ற பெயரிடப்பட்ட லேண்டர் உள்ளது. இது பாக்ஸ் போன்ற தோற்றம் கொண்டது ஆகும். உள்ளே இருக்கும் பிரக்யான் ரோவரை நிலவில் களமிறக்க இதுதான் உதவும். இது தரையிறங்கும் பகுதியில் வெப்ப கடத்துத்திறனைப் பதிவுசெய்யவும் மற்றும் நிலநடுக்கங்களை உணரவும் உதவும். இதில் நான்கு கால் பகுதிகள் இருக்கும். அதேபோல் நான்கில் பக்கமும் திரஸ்டர்கள் இருக்கும். இது 800 நியுட்டன் பவரை கொடுக்க கூடியது.
ரோவர்: இதன் உள்ளேதான் சந்திராயன் 3ன் ரோவர் இருக்கும். பிரக்யான் (சமஸ்கிருதத்தில் "ஞானம்"), விக்ரமில் இருந்து வெளியே வரும். அதன் உள் கேமராக்கள் சந்திரனில் இருக்கும் தடங்கல்களை பார்த்து அதற்கு ஏற்ப கவனமாக நகர்ந்து செல்லும். இது லேண்டர் விக்ரமில் இருந்து விலகி சென்றாலும் எல்லா நேரமும் விக்ரமின் கண் பார்வையில் இருக்கும். நிலவின் தரைப்பகுதி, மண் பகுதியை இது ஆய்வு செய்யும்.

இது ஒரு சின்ன சோதனை கூடம் போலவே செயல்படும். இது நிலவின் மேல் பகுதி ஆய்வு, சாம்பிள் ஆய்வு, சாம்பிள் எடுத்து வைத்துக்கொள்வது, சில புகைப்படங்களை பூமிக்கு அனுப்புவது, உள்ளே இருக்கும் ஜியோலொஜிக்கல், கெமிக்கல் ஆகியவற்றை ஆய்வு செய்யும். இதில் மொத்தம் 6 சக்கரங்கள் இருக்கும்.
எங்கே களமிறங்கியது?: நிலவின் தென் துருவப் பகுதியில் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் களமிறங்கியது. 1 கிமீ வேகத்திற்கும் குறைவாக இது தரையிறங்கியது.கடைசி 10 மீட்டரில் தொப்பென்று விழும் வகையில் இந்த விக்ரம் லேண்டர் தரையிறங்கியது. தரையிறங்கிய பிறகு, லேண்டர் 14 பூமி நாட்களுக்கு (ஒரு சந்திர நாள்) மேற்பரப்பில் பொருட்களை இந்த ரோவர் சேகரிக்கும்.
சந்திரயான் 3 மிஷன் ப்ரொபல்ஷன் மாடுல்: 2148 கி.கி
லேண்டர் தொகுதி: 26 கிலோ ரோவர் உட்பட 1752 கிலோ
சந்திரயான் 3 மொத்த எடை: 3900 கிலோ
குறிக்கோள் என்ன?: சந்திரயான்-3 திட்டத்திற்கு இஸ்ரோ மூன்று முக்கிய குறிக்கோள்களை நிர்ணயித்துள்ளது.
லேண்டரை சரியாக நிலவில் தரையிறக்குதல்.
சந்திரனில் ரோவரின் நகரும் திறன்களைக் கவனித்து கண்காணித்தால்.
நிலவின் இரசாயன மற்றும் இயற்கை கூறுகள், மண், நீர் பண்புகளை ஆய்வு செய்தல்.
நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்தல்.
என்ன நடக்கும்?: நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியது பற்றி பலரும் பேசி வரும் நிலையில்.. அது தரையிறங்கிய பின் என்ன நடக்கும் என்று இங்கே விளக்கி இருக்கிறோம்.
நிலவின் மேற்பரப்பில் லேண்டர் தரையிறங்கிய பிறகு, விக்ரமின் ஒரு பக்க பேனல் விரிவடையும், பிரக்யான் ரோவர் வெளியே வருவதற்கு ஒரு சரிவை உருவாக்கும். பிரக்யானின் சக்கரங்கள் மூவர்ணக் கொடி மற்றும் இஸ்ரோவின் லோகோவுடன் பொறிக்கப்பட்டுள்ளன. விக்ரமின் வயிற்றுப் பகுதியில் இருந்து பிரக்யான் வெளியே வந்து.. லேண்டரில் இருக்கும் பேனல் வழியாக சரிந்து ரோவர் வெளியே வரும். இதனால் பிரக்யான் உருளும் போது, சந்திர மேற்பரப்பில் மூவர்ணக் கொடி மற்றும் இஸ்ரோ லோகோவின் முத்திரைகளை பதித்து , இந்தியாவின் அடையாளத்தை உருவாக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications