சென்ட்ரல் டூ ஆவடி, அரக்கோணம் போறீங்களா! இத நோட் பண்ணுங்க.. ரயில்வே நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு
சென்னை: சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் இடையேயான ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், புறநகர் ரயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் மக்கள் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 1930ம் ஆண்டில் ஆங்கிலேயர் காலத்திலேயே இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டுவிட்டது. இந்த ரயில்கள் 4 பிரதான வழித்தடங்களில் 6 இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. அதாவது,

சென்னை சென்ட்ரல் - திருவொற்றியூர் - எண்ணூர் - பொன்னேரி - கும்மிடிப்பூண்டி - சூலூர்பேட்டை - நெல்லூர் இணைப்பு (176 கி.மீ.), சென்னை கடற்கரை - எழும்பூர் - மாம்பலம் - திரிசூலம் - தாம்பரம் - திருமால்பூர் - தக்கோலம் - அரக்கோணம் இணைப்பு. (122.71 கி.மீ.), சென்னை கடற்கரை - எழும்பூர் - மாம்பலம் - திரிசூலம் - தாம்பரம் - செங்கற்பட்டு - மேல்மருவத்தூர் - திண்டிவனம் - விழுப்புரம் இணைப்பு (163 கி.மீ.), சென்னை சென்ட்ரல் - அம்பத்தூர் - ஆவடி - திருவள்ளூர் - அரக்கோணம் - திருத்தணி - ரேணிகுண்டா - திருப்பதி இணைப்பு. (151 கி.மீ.), சென்னை சென்ட்ரல் - அம்பத்தூர் - ஆவடி - திருவள்ளூர் - அரக்கோணம் - காட்பாடி - வேலூர் கண்டோன்மண்ட் - ஆரணி - திருவண்ணாமலை - திருக்கோவிலூர் - விழுப்புரம் இணைப்பு (290 கி.மீ.), சென்னை சென்ட்ரல் - அம்பத்தூர் - ஆவடி - திருவள்ளூர் - அரக்கோணம் - காட்பாடி - ஜோலார்பேட்டை இணைப்பு (213 கி.மீ.) என மொத்தம் 896 கி.மீ தொலைவுக்கு புறநகர் ரயில்கள் இயக்கப்படுகிறது.
இதில் சென்னை சென்ட்ரல் - அம்பத்தூர் - ஆவடி - திருவள்ளூர் - அரக்கோணம் வரை இயக்கப்படும் புறநகர் ரயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த பாதையில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாகவே இந்த மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கிலிருந்து இரவு 21.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்லும் மின்சார ரயில் (வண்டி எண்: 43130) செவ்வாய், வியாழக்கிழமைகளில் (ஜூன் 6,8) ஆவடியுடன் நிறுத்தப்படும். ஆவடி-சென்ட்ரல் இடையே ரயில் சேவை தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
அரக்கோணத்திலிருந்து அதிகாலை 4 மணிக்கு வேளச்சேரி செல்லும் மின்சார ரயில் (வண்டி எண்: 43932) புதன், வெள்ளிக்கிழமைகளில் (ஜூன் 7,9) ரத்து செய்யப்படுகிறது. அரக்கோணம் - சென்னை கடற்கரை இடையே ரயில் சேவை தற்காலிகமாக ரத்துச் செய்யப்படுகிறது. அதேபோல வேளச்சேரியிலிருந்து இரவு 10.30 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் மின்சார ரயில் (வண்டி எண்: 43799) வியாழக்கிழமை (ஜூன் 8) சென்னை கடற்கரையுடன் நிறுத்தப்படும். சென்னை கடற்கரை - பட்டாபிராம் திங் மிலிட்டரி சைடிங் இடையே ரயில் சேவை தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கிலிருந்து இரவு 8.25 மணிக்கு வேளச்சேரி செல்லும் மின்சார ரயில் (வண்டி எண்: 43794) வெள்ளிக்கிழமை (ஜூன் 9) ஆவடியுடன் நிறுத்தப்படும். ஆவடி - சென்னை கடற்கரை இடையே ரயில் சேவை தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
மேலும், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கிலிருந்து இரவு 10.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்லும் மின்சார ரயில் (வண்டி எண்: 43132) வியாழக்கிழமை (ஜூன் 8) ஆவடியுடன் நிறுத்தப்படும். ஆவடி - சென்னை சென்ட்ரல் இடையே ரயில் சேவை தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களின் விவரம் பின்வருமாறு, சென்னை சென்ட்ரலிருந்து நள்ளிரவு 12.15 மணிக்கு ஆவடி செல்லும் மின்சார ரயில் (வண்டி எண்: 43001) புதன்கிழமை (ஜூன் 7) முதல் வெள்ளிக்கிழமை (ஜூன் 9) வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரையிலிருந்து நள்ளிரவு 1.20 மணிக்கு அரக்கோணம் செல்லும் மின்சார ரயில் (வண்டி எண்: 43801) புதன்கிழமை (ஜூன் 7) முதல் வெள்ளிக்கிழமை (ஜூன் 9) வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கிலிருந்து இரவு 11.55 மணிக்கு ஆவடி செல்லும் மின்சார ரயில் (வண்டி எண்: 43892) வியாழக்கிழமை (ஜூன் 8) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரலிலிருந்து நள்ளிரவு 11.30 மணி மற்றும் 11.45 மணிக்கு செல்லும் மின்சார ரயில்கள் (வண்டி எண்கள்: 66007,43025) வியாழக்கிழமை (ஜூன் 8) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications