பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ரூட்டில் ரயில் நேரத்தில் முக்கியமான மாற்றம்!
சென்னை: பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு, சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் ஏசி மின்சார ரயில்களின் சேவையில் இன்று (ஜனவரி 5 ஆம் தேதி) முதல் சில மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளள்ளன. இந்த வழித்தடத்தில் பயணிக்கும் பயணிகள் இதை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்ல வேண்டிய ஏசி மின்சார ரயில், இனி மாலை 3.47 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். தாம்பரத்தில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு செல்ல வேண்டிய ஏசி மின்சார ரயில், இனி பிற்பகல் 3.23 மணிக்கு புறப்படும். செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு மாலை 4.30 மணிக்கு புறப்பட வேண்டிய ஏசி மின்சார ரயில் இனி, தாம்பரத்தில் இருந்து மாலை 5.55 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சார்பில் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கடற்கரையில் இருந்து தாம்பரம் வழியாகச் செங்கல்பட்டு செல்லும் மாலை நேர குளிர்சாதன வசதியுள்ள புறநகர் மின்சார ரயில், செங்கல்பட்டிலிருந்து தாம்பரம் வழியாக கடற்கரை செல்லும் குளிர்சாதன வசதி மின்சார ரயில், தாம்பரத்திலிருந்து பிற்பகலில் கடற்கரையில் இருந்து புறப்படும் ரயில் ஆகியவற்றின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரையிலிருந்து பிற்பகல் 3.47 மணிக்கு புறப்படும் குளிர்சாதன வசதி மின்சார ரயில் மாலை 4.42 மணிக்கு தாம்பரத்துக்கும், செங்கல்பட்டிலிருந்து வரும் குளிர்சாதன வசதி மின்சார ரயில் மாலை 5 மணிக்கு தாம்பரத்தை வந்தடைந்து, மாலை 5.55 மணிக்கு கடற்கரைக்கு வந்து சேரும். தாம்பரத்திலிருந்து பிற்பகல் 2.28 மணிக்கு புறப்படும் குளிர்சாதன வசதி மின்சார ரயில் பிற்பகல் 3.23 மணிக்கு கடற்கரை சென்றடையும்.
சென்னை தாம்பரம் - செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையிலான ரயில்கள் ஊரப்பாக்கம் நிலையத்தில் நின்று செல்லவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்துடன் மேலும் 9 மின்சார ரயில்களின் நேர அட்டவணையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications