100 நாள் வேலை திட்ட பெயர் மாற்றம்! மத்திய அரசின் சர்வாதிகாரம்! தவாக வேல்முருகன் விமர்சனம்
சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் பெயரை மாற்றும் முயற்சி என்பது தலைதூக்கும் மத்திய அரசின் சர்வாதிகாரம் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில், தனது பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி, புதிய விதைகள் சட்டம் 2025, மின்சாரச் சட்டம் 2025, பொதுக் காப்பீட்டு திட்டத்தில் 100 விழுக்காடு அந்நிய முதலீட்டை அனுமதிப்பது, அணுசக்தித் திட்டத்தில் அந்திய நிறுவனங்களை நுழைப்பது உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத சட்டங்களை கொண்டு வர பாசிச பாஜக அரசு நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக, கோடிக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மாற்றுவதற்கான முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது.
அதாவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை, பூஜ்ய பாபு சட்டம் என மாற்ற ஒன்றிய அரசு முடிவெடுத்திருக்கிறது.
மகாத்மா காந்தி பெயர் நீக்கமும், அந்தச் சட்டத்தை மாற்றி, அதை 'பூஜ்ய பாபு சட்டம்' என்று பெயரிட முடிவெடுத்திருப்பது, மகாத்மா காந்தி மீது ஒன்றிய அரசுக்கு உள்ள வெறுப்பை வெளிப்படுத்துகிறது.
தேசத் தந்தையின் பெயரை ஒரு திட்டத்திலிருந்து நீக்குவது வன்மையான கண்டனத்துக்குரியது. எந்தவொரு ஆளும் கட்சியும் தங்கள் விருப்பு வெறுப்பின் அடிப்படையில் திட்டங்களுக்கு ஏற்கனவே சூட்டப்பட்ட தலைவர்களின் பெயரை மாற்றுவது ஆரோக்கியமான அணுகுமுறை இல்லை.
மேலும், இந்தச் சட்டத்தில் உள்ள 'உத்தரவாதம்' என்ற வார்த்தையை நீக்கிவிட்டு வெறும் 'வேலை வாய்ப்பு' என்று மாற்றவும் ஒன்றிய அரசு திட்டமிட்டிருக்கிறது. இதன் மூலம், ஒரு குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்கு 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என்ற சட்டப்படியான உரிமை பயனாளிகளிடம் இருந்து பறிக்கப்படும் பேராபத்து ஏற்பட்டிருக்கிறது.
கோடிக்கணக்கான நூறுநாள் வேலைத் திட்ட பயனாளிகளின் வயிற்றில் அடிக்கும் இந்தச் செயல் மூலம், நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு எதிரானவர்கள் நாங்கள் என்பதை மோடி தலைமையிலான ஒன்றிய அரசு பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகிறது.
எனவே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் பெயரை மாற்ற முயற்சி செய்யும் மோடி அரசின் சர்வாதிகார போக்கை முறியடிக்க, இந்தியாவில் ஒருமித்த கருத்துள்ள அனைத்து எதிர்க்கட்சிகளையும், ஜனநாயக அமைப்புகளையும் தமிழ்நாடு அரசு ஒன்று திரட்ட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications