வௌியானது யுபிஎஸ்சி முதன்மை தேர்வு முடிவுகள்! ரிசல்ட்டை இந்த வெப்சைட்டில் தெரிந்துகொள்ளுங்கள்
சென்னை: கடந்த செப்டம்பர் 15 முதல் 24ம் தேதி வரை நடைபெற்ற யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வுகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் பணியிடங்களுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வை நடத்தி வருகிறது. ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இத்தேர்வு முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகளைக் கொண்டது. இதனிடையே 1,105 காலி பணியிடங்களுக்கான 2023ம் ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த மே மாதம் 28ம் தேதி நடைபெற்ற நிலையில் ஜூன் 12ம் தேதி அதன் முடிவுகள் வெளியாகின.

இதைத்தொடர்ந்து முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மைத் தேர்வு கடந்த செப். 15, 16, 17, 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இது 9 எழுத்துத் தேர்வுகளை உள்ளடக்கியது. இந்த நிலையில் செப்டம்பர் 15 முதல் 24ம் தேதி வரை நடைபெற்ற யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகளை http://upsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
முதல்நிலைத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுகின்றனர். முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்காணலுக்கு செல்கின்றனர். இறுதியாக, முதன்மை மற்றும் நேர்காணல் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். இந்த தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் பல்வேறு பதவிகள் நிரப்பப்படுகின்றன.
தற்போது முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் upsconline.nic.in எனும் இணையதளத்திற்கு சென்று, DAF-II விண்ணபங்களை பூர்த்தி செய்ய வேண்டும். இதற்கான கால அவகாசம் டிச.9-15ம் தேதி வரை வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications