கமல் கட்சியிடம் கூட்டணி பேரம்.. குடிக்காமலேயே மயங்கி விழுந்த செல்லபாண்டியன்!.. அப்படி என்ன சொன்னார்?
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியிடம் கூட்டணி குறித்து பேச சென்ற மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் செல்ல பாண்டியன் பொதுச் செயலாளர் குமரவேல் கூறியதை கேட்டு அங்கேயே மயங்கி விழுந்துவிட்டாராம்.
தேர்தல் என்றாலே கூட்டணி, பேரம் , பேச்சுவார்த்தை என களைகட்டும். இங்கிருப்பவர் அங்கிருப்பார், அங்கிருப்பவர் எங்கோ இருப்பார். இது போன்ற கூட்டணி பேச்சுவார்த்தையில் சுவாரஸ்மான சம்பவங்களும் நடைபெறும்.
அந்த மாதிரியான ஒரு சம்பவத்தைத்தான் இப்போது நீங்கள் பார்க்க போகிறீர்கள். மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் என ஒன்று இருக்கிறதே அது நினைவிருக்கிறதா? அதோட தலைவர் நம்ம செல்லபாண்டியன்.

புதுகை
இவர் வேலூர் எம்பி தேர்தல், புதுகை, திருப்பரங்குன்றம், நாங்குநேரி இடைத்தேர்தல்களில் சுயேச்சையாகவே களமிறங்கியுள்ளார். அந்த அனுபவத்தை வைத்து கொண்டு அவர் கமலிடம் கூட்டணி பேச முயற்சித்தார். இதற்காக கமலுக்கு ட்விட்டரில் அவரது அமைப்பின் புள்ளிவிவரங்களுடன் மெசேஜ் அனுப்பியுள்ளார்.

30 லட்சம்
உடனே கமல் அந்த ட்வீட்டை பொதுச் செயலாளர் குமரவேலுவுக்கு பார்வேர்டு செய்துவிட்டு "கொஞ்சம் என்னன்னு விசாரிங்க" என கூறியுள்ளார். குமரவேலும், செல்லத்தை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது தேர்தலில் நிற்க 30 லட்சம் ரூபாய் தேவைப்படும். குறைந்தபட்சம் 15 லட்சம் ரூபாயாவது செலவு செய்ய வேண்டும் என சொன்னார்.

செல்லபாண்டியன்
இதை கேட்ட செல்லத்திற்கு கிறுகிறு என வந்து குடிக்காமலேயே மயங்கி விழுந்துள்ளார். இதுகுறிதது செல்லம் கூறுகையில் எனக்கு கமல் மீது மரியாதை உண்டு. அதே மரியாதையை அவரும் எனக்கு கொடுத்துள்ளார். மது குடிப்போருக்கென அவருடைய திட்டங்கள் எனக்கு பிடித்ததால் அவருடன் கூட்டணி வச்சிக்க நினைத்தேன் என்றார் செல்ல பாண்டியன்.

தேர்தல்
கொரோனாவால் மூடப்பட்டிருந்த மதுக்கடைகள் ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்ட போது டாஸ்மாக் பிரியர்களுக்கு இலவசமாக முகக் கவசம் வழங்கப்படும் என செல்ல பாண்டியன் தெரிவித்திருந்தார். ஒவ்வொரு தேர்தலிலும் மதுபாட்டில்கள் பிரிண்ட் போட்ட துண்டை அணிந்து கொண்டு மக்களின் கவனத்தை ஈர்ப்பார்.












Click it and Unblock the Notifications